சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை!
யு.எம்.இஸ்ஹாக்
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு நாளை 13.12.2013 நடைபெறும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது .
14 மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரப்பகுதிகளிலேயே இந்த சுனாமி ஒத்திகை நாளை பிற்பகல் 3.00மணிக்கு இடம் பெறவுள்ளது .
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்ட செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு , வளி மண்டலவியல் திணைக்களம் , தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை தகவல் மையம் என்பன கூட்டாக இணைந்து இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை நடத்துகின்றன.
Comments
Post a Comment