கல்முனை பிரதேச செயலக எல்லை நிர்ணய விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து பேசி தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும்

யூ.எம்.இஸ்ஹாக்
கல்முனை பிரதேச செயலக எல்லை நிர்ணய விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள்  இணைந்து பேசி தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் .பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தால்  தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டு  இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில்  கூட தடங்கல்  ஏற்படுவதுடன்  எதிர்காலத்தில்  கிழக்கு மாகாண சபையில்  தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து  ஆட்சியமைக்க முடியாத நிலையூம் ஏற்படலாம்.
இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் அண்மையில் நற்பிட்டிமுனையில் நடை பெற்ற  கல்முனை பிரதேச செயலக  எல்லை பிரிப்பு  சம்பந்தமான  கலந்துரையாடல் கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசுகையில்  கூறினார்.
கல்முனை பிரதேச செயலக எல்லை பிரிப்பு  சம்பந்தமான கூட்டம்  ஓய்வூ பெற்ற விவசாய போதனாசிரியர் வை.எம்.அலிபா தலைமையில்  நற்பிட்டிமுனையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அப்துல் கபூர் தொடர்ந்து பேசுகையில்  கல்முனை பிரதேச செயலகங்களுக்கிடையில் எல்லைகளை நிர்ணயிக்கும் விடயம் தீர்மானிக்க முடியாமல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. சில அரசியல் வாதிகளும்இ இனவாதிகளும்இ மதவாதிகளும் இந்த விடயத்தில் தீர்க்கதரிசனமின்றி  செயற்பட்டு வருகின்றார்கள் . கடந்த முப்பது வருடங்களாக  நீறு பூத்த நெருப்பாக  இருந்து வந்த  இனப்பிரச்சினைக்கு  இன்னும் தீர்வூ காணப்படவில்லை . வடகிழக்கு இனப்பிரச்சினை விடயத்தில்  தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வூடன்  இணைந்து இணக்கப்பாட்டிற்கு  வருவதன் மூலமாகத்தான்  நியாயமான தீர்வைக் காணமுடியூம். ஏன்ற உண்மையை  தமிழ்இமுஸ்லிம் மக்கள்  உணர்ந்திருப்பதை  இந்த நாட்டின்  பெரும் பாண்மைச் சமுகமும் அறிந்து வைத்துள்ளனர். இதனாலேதான் தமிழ் முஸ்லிம் உறவூ வளர விடக் கூடாது என்பதில் அம்பாறை மாவட்ட பெரும்பாண்மை சமுகத்தின்  அமைச்சர்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள்.

கல்முனை பிரதேச செயலகத்தின்  எல்லை நிர்ணயம் மற்றும்  தரமுயர்த்தும் விடயத்திலும்  அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த  பெரும் பாண்மை  சமூகத்தைச் சார்ந்த  அமைச்சர்களின் ஆதரவூம்  கல்முனை  ஸ்ரீ சுபத்திராராமய விகாரையின் விகாராதிபதி  சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்  கூரை மீது ஏறி உண்ணாவிரதம்  இருப்பேன் என்று கூறுவதும்  தமிழ் மக்கள் மீது கொண்ட பாசத்தினால் அல்ல . தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும்  இடையே  உறவூ இறுக்கமாகி விடக் கூடாது என்பதற்காகவே ஆகும். இந்த உண்மையை தமிழ் முஸ்லிம் மக்கள் விளங்கிக் கொள்வது காலத்தின் தேவையாகும்.
யூத்தமும் இனரீதியான கடத்தல்களும் நடந்த காலத்தில் களத்தில் நின்று தமிழ் முஸ்லிம் மக்களின்  உறவூ பாதிக்கப்படக் கூடாதென்று  சமாதானத்தையூம் ஒற்றுமையையூம்  நிலைநாட்டியவர்கள் நாங்கள். அன்று தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் கூறிய சமாதானத்தையூம்  ஒற்றுமையையூம் பற்றித்தான்  இன்று கல்முனை பிரதேச செயலகம் என்ற  பெயரில் முஸ்லிம்களும் இதமிழர்களும் பிரிந்து விடக் கூடாதென்று  கூறுகின்றௌம். சிவில் சமுகத்தை சேர்ந்த தமிழ் தலைவர்களும் இமுஸ்லிம் தலைவர்களும் ஒரு மேடையில் சந்தித்து பேசி  நியாயமான  தீர்வூக்கு  வாருங்கள் என்று கேட்கின்றேன்.. இவ்வாறு  எடுக்கப்படும் தீர்வை எமது அரசியல் தலைமைகளிடம்  ஒப்படைத்து  இனியூம் நாம் பிரிந்து விடாது  ஒற்றுமையாக வாழவேண்டும் அப்போதுதான்  நமது விடுதலைப் பயணம் வெற்றி பெறும்.
இனரீதியான பிரதேச செயலகங்கள்  எதிர் காலத்தில் பிரிக்கப்பட மாட்டாதென்று  பொது நிருவாக அமைச்சர் கூறிக் கொண்டு  கல்முனையில் மட்டும்  இனரீதியான பிரதேச செயலகங்களைப் பிரிப்பதற்கு முனைவது ஏன்?  கல்முனையில்  தமிழ் முஸ்லிம் மக்களின்  முரண்பாட்டுக்கு மத்தியில்  பிரதேச செயலக பிரிவை  ஏற்படுத்தினால்  காரைதீவூஇ நாவிதன் வெளி  போன்ற  இடங்களில்  முஸ்லிம்கள் தனியான பிரதேச செயலகங்களை  கேட்கலாம். இதனால்  தமிழ் முஸ்லிம் உறவில்  பாரிய விரிசல்  ஏற்படும். கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள்  இணைந்து  மாகாண சபை அமைக்கவோ  வட கிழக்கில்  தமிழ் முஸ்லிம் உறவூ வளர விடாமல்  தடுக்கவூம் முடியூம் என்று சில பேரினவாத சக்திகள் திட்டமிட்டு  செயற்பட்டு வருகின்றனர்.
இந்த ஆபத்திலிருந்து  தமிழ் முஸ்லிம் மக்களை காப்பாற்ற வேண்டுமானால்  தமிழர் விடுதலைக் கூட்டணியூம்இஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியூம்  இணைந்து பேசி கல்முனை பிரதேச செயலக  எல்லை நிர்ணய விடயத்தில் தீர்வூ காண வேண்டும் என்று அப்துல் கபூர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்