பள்ளிவாயல் விடயத்தில் பொலிசாரை தலையிட வேண்டாம் என பொலிசாருக்கு பிரதமர் உத்தரவு

20-12-2013 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 3.45 மணிவரை பிரதமர் தி.மு.ஜயரட்னவை பாராளுமன்றத்திலுள்ள அவரது பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையில் அரசாங்கத்திலுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் ,அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

இங்கு குறிப்பாக கொழும்பில் 3 பள்ளிவாயல்களை மூடிவிடுமாறு பொலிசார் உத்தரவுவிடுத்துள்ளது பற்றி கலந்துரையாடினர்.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்,சிரேஷ்ட அமைச்சர் பௌசி உட்பட அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,பஷீர் சேகுதாவூத்,அதாவுல்லாஹ் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ்,         பைஸல் முஸ்தபா,காதர் ,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி அமைச்சர் அதாவுல்லா , பாராளுமன்ற உறுப்பினர்களான  எச்.எம்.எம்.ஹரீஸ் ,பைசால் காசிம் உட்பட அரசாங்கத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதமரிடம் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிவாயலை மூடுமாறு கூறுவதையும் ,பள்ளிவாயல் தாக்கப்படுவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து பிரதமர் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் உடனடியாகத் தொடர்பு கொண்டு பள்ளிவாசல் விடயத்தில் பொலிசாரை தலையிட வேண்டாம் என உத்தரவிட்டார்.

அத்தோடு எதிர்வரும் திங்கட்கிழமை புத்தசாசன அமைச்சில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் தலைமையில் பொலிசார் ,அரச அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள்; இடையில் கூட இருந்த கூட்டத்தை அமைச்சின் செயலாளரை வைத்து நடத்த வேண்டாம் என முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவித்ததோடு இனிமேல் இவ்வாறான கூட்டத்தை நடத்துவதென்றால் பிரதமரை நடத்துமாறும் கேட்டுக்ககொண்டனர்.

அதற்கு பிரதமர் அந்த கூட்டத்தை நடத்த வேண்டாம் என தான் தனது செயலாளருக்கு அறிவிப்பதாகவும் அவர் இனிமேல் பள்ளிவாயல் பற்றி தனக்கு தெரியாமல் எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம் என எழுத்து மூலம் தனது செயலாளருக்கு அறிப்பதாகவும் தெரிவித்தார்.

பள்ளிவாயலை மூடுமாறு கூறுவதையும் ,பள்ளிவாயல் தாக்கப்படுவதை நிறுத்துமாறு அரசாங்கத்திலுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் , அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகோபித்து தமது எதிரிப்புக்களை தெரிவித்தனர்.

இன்று பிரதமருடன் இடம்பெற்ற இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பு தெஹிவளை ஸைனப் பள்ளிவாயலில் மஹரிப் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்திற்கு அமைவாகவே இடம்பெற்றது இதில் முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா ,மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்