சபாநாயகர் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி: அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மோதல்

2 வது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அமைச்சர்கள் அணியும் எதிர்க் கட்சி, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியும் மோதவுள்ளன.
அமைச்சர்கள் அணிக்கு விளையாட் டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமைதாங்கவுள்ளார். உபதலைவராக பிரதியமைச்சர் சனத் ஜெயசூரிய செயற்படவுள்ளார்.
அமைச்சர்கள் அணி விபரம் வருமாறு: மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த விமல் வீரவங்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, பிரேமலால் ஜயசேகர, இந்திக பண்டாரநாயக்க, ரோஹன திஸாநாயக்க, சனத் ஜயசூரிய, ஏர்ல் குணசேகர, ரோஹித அபேகுணவர்தன, லசந்த அழகியவன்ன, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி: தலைவர் அர்ஜுன ரணதுங்க, உபதலைவர் நாமல் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, நிரஞ்சன் விக்கிரமசிங்க, அகில விராஜ் காரியவசம், ரொஹான் ரத்வத்த, ஹரீன் பெர்ணான்டோ, நாரனாத் பஸ்நாயக்க, எரிக் வீரவர்தன, திலும் அமுனுகம, கனக ஹேரத், செஹான் சேமசிங்க மற்றும் நழின் பண்டார.ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
இதேவேளை கடந்த முறை இடம்பெற்ற சபாநாயகர் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அமைச்சர்கள் அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை இடம்பெற்ற போட்டிக்கு அனுசரணை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வழங்கி யமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இடம்பெறும் போட்டிக்கு விளையாட்டுத்துறை அமைச்சு அனுசரணை வழங்குவது குறிப்பி டத்த்ககது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்