கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசத்தில் நாளை மின்சாரம் தடைப்படும்

அம்பாறை மாவட்ட கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசத்துக்குட்பட்ட சில பிரதேசங்களில் நாளை 2013.12.21 ஆம் திகதி சனிக்கிழமை மின்சாரம் தற்காலிகமாக தடைசெய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் பிரதேச மின் பொறியியலாளர் தெரிவித்தார்.

அம்பாறை உப மின் நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர், அட்டப்பளம், ஒலுவில், அஷ்ரப் நகர், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் மீனோடைக்கட்டு ஆகிய பிரதேசத்தில் மின்சார அவசர திருத்த வேலைகள் காரணமாகவே மேற்படி குறிப்பிட்ட பிரதேசங்களில் நாளை காலை 8.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை மின்சாரம் தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் பிரதேச மின் பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு