க.பொ.த (சா/த): வரலாற்றில் அதிகூடிய மாணவர், அதிகாரிகள் பங்கேற்கும் பரீட்சை
5,78,140 மாணவர்கள் தோற்றுவர்
* 76,000 அதிகாரிகள்
* மாற்றுத்திறனாளிகள்
* கைதிகளுக்கு விசேட ஏற்பாடுகள்
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றிலேயே அதிகூடிய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதும் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதும் இதுவே முதற் தடவை யாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. ஜே. எம். புஷ்பகுமார நேற்று தெரிவித்தார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக வுள்ள க. பொ. த. சாதாரணதரப் பரீட் சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ள அதேநேரம், 76 ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள் பரீட்சை கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
விண்ணப்பதாரிகளுள் சுமார் 20 ஆயிரம் பேர் இறுதி தறுவாயில் பரீட்சைக்கு சமுகமளிப்பது இல்லையென சுட்டிக்காட்டிய ஆணையாளர் நாயகம் ஒவ்வொரு மாணவர்க்கெனவும் அதிக பணம் செலவழிக்கப்படுவதனால், அவர்களை சமுகமளிக்கச் செய்வதில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதேவேளை வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் மூன்று பரீட்சார்த்திகளுக்கும் நாடு முழுவதுமிருந்து 510 மாற்று திறனாளிகளுக்கும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
சுமார் 10 பரீட்சார்த்திகள் வினாத்தாளை சுயமாக வாசிப்பதற்கோ அதற்குரிய விடையை எழுதவோ முடியாத நிலையில் உள்ளனர். இம்மாணவர்களுக்கென விசேடமாக 20 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஒரு அதிகாரி வினாவை வாசிக்க, இன்னுமொரு அதிகாரி மாணவர்கள் கூறும் விடையினை ஒலிப்பதிவு செய்து பின்னர் அவர் சார்பில் எழுதுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கு
விசேட ஏற்பாடு
விசேட ஏற்பாடு
மாற்றுத் திறனாளிகளுக்கான கேட்டல் உபகரணங்கள், பார்வை குறைந்தவர்க ளுக்கான மேசை வில்லைகள், மேசை மின்விளக்கு, தாய், தந்தை அல்லது பாதுகாவலர் விண்ணப்பதாரியின் பார்வைக்கு தெரியும்படி இருப்பதற்கான அனுமதி அவர்களுக்கேயுரிய மேசை, கதிரை, சக்கர நாற்காலி ஆகியவற்றை உபயோகிக் அனுமதி 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை மாணவரின் கவனம் சிதறாது முதுகில் தட்டிக் கொடுப்பதற்கான விசேட அதிகாரிகள் போன்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஆணையாளர் நாயகம் பரீட்சை ஏற்பாடுகளின் பூர்த்தி மற்றும் விசேட ஒழுங்குகள் குறித்து விளக்கமளித்தார்.
நாடு முழுவதுமுள்ள 4300 பரீட்சை நிலையங்களில் இம்முறை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளிலும் பரீட்சை நடைபெறவுள்ளமையினால், பொலிஸ் மற்றும் முப்படையினருடன் பாதுகாப்பினை பலப்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
நாளை 07 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையிலும் பின்னர் வினாத்தாள் திருத்தும் பணியின் போதும் ரோந்து நடவடிக்கைகள் உள்ளிட்ட விசேட பாதுகாப்பினை வழங்க பொலிஸ் மற்றும் முப்படையினர் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக வினாத்தாள் அச்சிடும் அச்சகம் விசேட கணனி தொழில்நுட்பத்தின் கீழ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. அச்சகத்தில் பணிபுரிவோர் சீருடை அணிந்திருப்பதுடன், அச்சகத்திற்குள் வருவோரும் வெளியேறுவோரும் பூரண சோதனைக்குட்படுத்தப்பட்டு வருவதனால், எவ்வித குளறுபடிகளும் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லையெனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியாகிய அனைத்து பரீட்சார்த்திகளும் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டினை எடுத்து வரவேண்டியது கட்டாயம் எனவும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தினார். மேற்படி 16 வயது பூர்த்தியாகாத மாணவர்கள் மாத்திரம் தபால் அடையாள அட்டையினை உபயோகிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பரீட்சைக்கான அனுமதி அட்டையினை அலட்சியம் செய்யாது மாணவர்கள் தமது மொழி மூலம் மற்றும் தோற்றவுள்ள பாடங்கள் ஏற்கனவே சரிபார்த்து பரீசைக்கு முன்னரே திணைக்களத்துக்கு நேரில் வந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். காரணம், குறித்த மாணவனின் பரீட்சை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள வினாத்தாள்களே பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவதனால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
பரீட்சை நிலையங்களுக்குள் நிலைய தலைமை அதிகாரி தவிர்ந்த வேறு எவரும் கையடக்கத் தொலைப§சி கல்குலேட்டர் ஆகியன கொண்டு செல்ல இயலாது. தலைமை அதிகாரி ஷிilலீnt சீoனீ இல் தொலைபேசியை வைத்திருப்பதுடன் தேவையேற்படும் போது என்னுடன் மாத்திரமே உரையாடலாம்.
மாணவர்கள் வினாத்தாளை பெற்றுக்கொண்டதும் அதில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளை தெளிவாக வாசிக்க வேண்டியது கட்டாயம். கேட்கப்பட்டிருக்கும் வினாவுக்கு ஏற்ற வகையில் பதிலை சுருக்கமாகவோ, விரிவாகவோ, விளக்கத்துடனோ அல்லது குறிப்புகளை மாத்திரமே வழங்குவதன் மூலம் நேரப் பிரச்சினை ஏற்படாது எனவும் ஆணையாளர் நாயகம் கூறினார்.
Comments
Post a Comment