சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், அ’சேனை, இறக்காமம் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலாளர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றம் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் இறக்காமம் ஆகியவற்றின் பிரதேச செயலாளர்களே இடமாற்றப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஐ.எம்.ஹனீபா நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கும்,
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.சலீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கும்
சம்மாந்துறை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.மன்சூர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கும்,
நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றும் றிபா உம்மா அப்துல் ஜலீல் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கும்
இறக்காமம் பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.நஸீர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றமானது அம்பாறை மாவட்ட செயலாளரின் சிபாரிசிற்கமையவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment