பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்
தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று (19)தனது கண்டனத்தை தெரிவித்தார்
கடந்த சில தினங்களுக்கு முன்னார் இப்பள்ளிவாசலை மூடுமாறு சிலர் அச்சுறுத்தி வந்த நிலையில் மீண்டும் பள்ளிவாசலின் கண்ணாடிகள் மீது இனவாதிகளினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டமை முஸ்லிம்களின் மதக் கடமைகளின் சுதந்திரத்தின் மீதான கேள்வியினை வலுவடையச் செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் ஹரீஸ் குறிப்பிட்டார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் நேற்று ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்திருந்த போதிலும்,இந்த செயல் இடம் பெற்றுள்ளது,
இவ்வாறான செயல்களை தொடராமல் அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment