Posts

பள்ளிவாயல் விடயத்தில் பொலிசாரை தலையிட வேண்டாம் என பொலிசாருக்கு பிரதமர் உத்தரவு

Image
20-12-2013 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி தொடக்கம் 3.45 மணிவரை பிரதமர் தி.மு.ஜயரட்னவை பாராளுமன்றத்திலுள்ள அவரது பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட அமைச்சர் பௌசி தலைமையில் அரசாங்கத்திலுள்ள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள் ,அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இங்கு குறிப்பாக கொழும்பில் 3 பள்ளிவாயல்களை மூடிவிடுமாறு பொலிசார் உத்தரவுவிடுத்துள்ளது பற்றி கலந்துரையாடினர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்,சிரேஷ்ட அமைச்சர் பௌசி உட்பட அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,பஷீர் சேகுதாவூத்,அதாவுல்லாஹ் பிரதியமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ்,         பைஸல் முஸ்தபா,காதர் ,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி அமைச்சர் அதாவுல்லா , பாராளுமன்ற உறுப்பினர்களான  எச்.எம்.எம்.ஹரீஸ் ,பைசால் காசிம் உட்பட அரசாங்கத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் போது பிரதமரிடம் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிவாயலை மூடுமாறு கூறுவத...

2014 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குக்களால் நிறைவேற்றம்!

Image
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 60 வாக்குக்கள் அளிக்கப்பட்டதன் மூலம் 95 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வாக்களித்திருந்தன.

கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசத்தில் நாளை மின்சாரம் தடைப்படும்

Image
அம்பாறை மாவட்ட கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசத்துக்குட்பட்ட சில பிரதேசங்களில் நாளை 2013.12.21 ஆம் திகதி சனிக்கிழமை மின்சாரம் தற்காலிகமாக தடைசெய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் பிரதேச மின் பொறியியலாளர் தெரிவித்தார். அம்பாறை உப மின் நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர், அட்டப்பளம், ஒலுவில், அஷ்ரப் நகர், பாலமுனை, அட்டாளைச்சேனை மற்றும் மீனோடைக்கட்டு ஆகிய பிரதேசத்தில் மின்சார அவசர திருத்த வேலைகள் காரணமாகவே மேற்படி குறிப்பிட்ட பிரதேசங்களில் நாளை காலை 8.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை மின்சாரம் தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் பிரதேச மின் பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.

கல்முனை பிரதேச செயலக எல்லை நிர்ணய விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து பேசி தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும்

Image
யூ.எம்.இஸ்ஹாக் கல்முனை பிரதேச செயலக எல்லை நிர்ணய விடயத்தில் தமிழ் முஸ்லிம் கட்சிகள்  இணைந்து பேசி தீர்க்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் .பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தால்  தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டு  இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில்  கூட தடங்கல்  ஏற்படுவதுடன்  எதிர்காலத்தில்  கிழக்கு மாகாண சபையில்  தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து  ஆட்சியமைக்க முடியாத நிலையூம் ஏற்படலாம். இவ்வாறு கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் அண்மையில் நற்பிட்டிமுனையில் நடை பெற்ற  கல்முனை பிரதேச செயலக  எல்லை பிரிப்பு  சம்பந்தமான  கலந்துரையாடல் கூட்டத்தில்  கலந்து கொண்டு பேசுகையில்  கூறினார். கல்முனை பிரதேச செயலக எல்லை பிரிப்பு  சம்பந்தமான கூட்டம்  ஓய்வூ பெற்ற விவசாய போதனாசிரியர் வை.எம்.அலிபா தலைமையில்  நற்பிட்டிமுனையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல் கபூர் தொடர்ந்து பேசுகையில்  கல்முனை பிரதேச செயலகங்களுக்கிடையில் எல்லைகளை நிர்ணயிக்கும் விடயம் தீர்மானிக்க முடியாமல் ந...

பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

Image
தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலை கண்டித்து பாராளுமன்ற  உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் இன்று   (19)தனது கண்டனத்தை தெரிவித்தார்  கடந்த சில தினங்களுக்கு முன்னார் இப்பள்ளிவாசலை மூடுமாறு சிலர் அச்சுறுத்தி வந்த நிலையில்  மீண்டும் பள்ளிவாசலின் கண்ணாடிகள் மீது இனவாதிகளினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டமை முஸ்லிம்களின் மதக் கடமைகளின் சுதந்திரத்தின் மீதான கேள்வியினை வலுவடையச் செய்துள்ளதாக பாராளுமன்றத்தில் ஹரீஸ்  குறிப்பிட்டார்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  றவூப் ஹக்கீம் நேற்று ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்திருந்த போதிலும்,இந்த செயல் இடம் பெற்றுள்ளது, இவ்வாறான செயல்களை தொடராமல் அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் சபாநாயகரை  கேட்டுக் கொண்டார்.

இந்த வருடம் கடமையிலிருந்த வேளை 52 ஊடகவியலாளர்கள் படுகொலை

Image
52 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் நிமித்தம் இந்த வரு­டத்தில் கொல்­லப்­பட்­டுள்­ள­ தாக அமெ­ரிக்­காவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் கண்­கா­ணிப்பு அமைப்பு புதன்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.   இந்த ஆண்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டமை தொடர்பில் இரண்­டா­வது மோச­மான ஆண்­டாக பதி­வே­டு­களில் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்ற போதும் கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது படு­கொ­லை­களில் வீழ்ச்சி காணப்­ப­டு­வ­தாக நியூ­யோர்க்கை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாது­காப்பு சபை குறிப்­பிட்­டுள்­ளது.   மேலும் இந்த வரு­டத்தில் அதி­க­ள­வான ஊட­க­வி­ய­லா­ளர்­கள் மர­ணத்தை தழு­விய நாடுகள் வரி­சையில் தொடர்ந்து இரண்­டா­வது ஆண்­டாக சிரியா முத­லி­டத்தில் உள்­ளது. அங்கு இந்த வருடம் 21 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது பணியின் நிமித்தம் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.   சிரி­யா­வுக்கு அடுத்து அதி­க­ளவு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ள் மர­ணங்­களை எதிர்­கொண்ட நாடுகள் வரி­சையில் அடுத்­த­டுத்த இடங்­களில் எகிப்து, பாகிஸ்தான், சோமா­லியா, பிரேசில்,...

'நாளைய போதையற்ற கிராமம் இன்றைய இளைஞ்ர்களின் கையில்'

Image
யு.எம்.இஸ்ஹாக்   'நாளைய போதையற்ற கிராமம்  இன்றைய இளைஞ்ர்களின் கையில்' என்ற தலைப்பில் கல்முனை பிரதேச செயலகத்தினால் போதைபொருள் பாவனை தொடர்பாக இளைஞ்ர்களுக்காக  நடாத்தப்பட்ட செயலமர்வு  நேற்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது  சமுர்த்தி தலைமைபீட  முகாமையாளர்  எ.ஆர்.எம்  ஸாலி தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர்  எம்.எம்.நௌபல், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டபிள் யு .எம்.கபார், சமுர்த்தி   உத்தியோகத்தர் பலர் கலந்துகொண்டனர்.

சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், அ’சேனை, இறக்காமம் பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்!

Image
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலாளர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் இறக்காமம் ஆகியவற்றின் பிரதேச செயலாளர்களே இடமாற்றப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஐ.எம்.ஹனீபா நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கும், சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.சலீம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கும் சம்மாந்துறை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.மன்சூர் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கும், நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றும் றிபா உம்மா அப்துல் ஜலீல் இறக்காமம் பிரதேச செயலகத்திற்கும் இறக்காமம் பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஏ.எல்.எம்.நஸீர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றமானது அம்பாறை மாவட்ட செயலாளரின் சிபாரிசிற்கமையவே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ...

சுகாதார சேவையில் 10,400 பேருக்கு ஜனாதிபதியின் கரங்களால் நியமனக்கடிதங்கள்!

Image
சுகாதார சேவைக்கு சுமார்  10400  பேருக்கு    புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ( 17)  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்  கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்   நடைபெற்றது. . சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாகாண சபை அமைச்சர்கள்  ஐக்கிய தாதிமார் சங்க தலைவர் வண. முறுத்தட்டுவே ஆனந்த தேரர்  ,  சுகாதார    அமைச்சின் செயலாளர் டாக்டர்.நிஹால் ஜயதிலக்க மற்றும் தாதிமாரின் பெற்றோர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில்  6025  தாதிகளும் மேலதிக சுகாதார நடவடிக்கைகளுக்கு  1999  பேரும் தாதிப்பயிற்சி பெற்ற   2000  பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன இந்நியமனத்தின் பின்னர் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதிகளின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகமாகும். இந்த எண்ணிக்கையை ஐம்பதாயிரமாக அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இப்புதிய நியமனங்கள் வழங்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.  
திவிநெகும  மனைப் பொருளாதார  வேலை திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை சட்டம்பியார் வீதியில் உள்ள ஆசிரியை ஒருவரின்  வீட்டில் நடுகை செய்யப்பட்ட ஜம்பு  மரம்  காய்த்துக்  குலுங்குவதைப்  படத்தில்  காணலாம் 

சபாநாயகர் சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி: அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மோதல்

Image
2 வது சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சவால் கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அமைச்சர்கள் அணியும் எதிர்க் கட்சி, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியும் மோதவுள்ளன. அமைச்சர்கள் அணிக்கு விளையாட் டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமைதாங்கவுள்ளார். உபதலைவராக பிரதியமைச்சர் சனத் ஜெயசூரிய செயற்படவுள்ளார். அமைச்சர்கள் அணி விபரம் வருமாறு: மஹிந்தானந்த அளுத்கமகே, டலஸ் அழகப் பெரும, சுசில் பிரேம ஜயந்த விமல் வீரவங்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, பிரேமலால் ஜயசேகர, இந்திக பண்டாரநாயக்க, ரோஹன திஸாநாயக்க, சனத் ஜயசூரிய, ஏர்ல் குணசேகர, ரோஹித அபேகுணவர்தன, லசந்த அழகியவன்ன, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி: தலைவர் அர்ஜுன ரணதுங்க, உபதலைவர் நாமல் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, நிரஞ்சன் விக்கிரமசிங்க, அகில விராஜ் காரியவசம், ரொஹான் ரத்வத்த, ஹரீன் பெர்ணான்டோ, நாரனாத் பஸ்நாயக்க, எரிக் வீரவர்தன, திலும் அமுனுகம, கனக ஹேரத், செஹான் சேம...

தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கெதிராக நடவடிக்கை

Image
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமலும், கையடக்க தொலைபேசியில் உரையா டிக் கொண்டும் ஒரு கைப் பிடியை மட்டும் பிடித்துக் கொண்டும் செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் போக்குவரத்து அமை ச்சர் சி.பி. ரத்னாயக்க நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார். பாடசாலை பஸ்களில் செல்லும் மாணவர்களின் பாதுகா ப்பை உறுதிப்படுத்தும் வகை யில் அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனு ப்பும் முறையொன்றையும் புதிதாக நடைமுறைப்படுத்த வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வரவு - செலவு திட்டத்தின் போக்கு வரத்து அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நேற்றுப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் போக்குவரத்துச் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு பல்வேறு விசேட நடவடிக்கைகளை போக்குவரத்து அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. பஸ்ஸில் பணியாற்றும் சாரதிகளும், நடத்துனர்களும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். இதற்கமைய ஜி.டி.எஸ். சீ.சீ.ரி.வி. கமரா ஆகியவ...

சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை!

Image
யு.எம்.இஸ்ஹாக்  தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகை நிகழ்வு நாளை 13.12.2013 நடைபெறும் என  அனர்த்த முகாமைத்துவ மத்திய   நிலையம்  அறிவித்துள்ளது . 14  மாவட்டங்களைச் சேர்ந்த கரையோரப்பகுதிகளிலேயே இந்த சுனாமி ஒத்திகை நாளை பிற்பகல்  3.00 மணிக்கு  இடம் பெறவுள்ளது . அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ,  மாவட்ட செயலகங்களில் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு  ,  வளி மண்டலவியல் திணைக்களம்  ,  தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இலங்கை தகவல் மையம் என்பன கூட்டாக இணைந்து இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான    ஒத்திகையை நடத்துகின்றன. 

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ம் கல்வியாண்டு ஆரம்பம்

Image
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ம் கல்வியாண்டிற்கான (2ndsemester) கல்வி நடவடிக்கைகள் நாளை  09.12.2013ல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். இதில் கலை கலாச்சார பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடம், அரபு மொழி இஸ்லாமிய கற்கை பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன உள்ளடங்கும். தங்குமிட வசதி பெற்றுள்ள மாணவர்கள் இன்று   08.12.2013 மாலை 5.00மணிக்கு முன்னர் தங்களது இடங்களுக்கு சமுகம்தர வேண்டும் என்று மாணவர்களை பல்கலைக்கழக நிருவாகம் பணித்துள்ளது. பிரயோக விஞ்ஞான பீட 2ம் கல்வியாண்டிற்கான(2ndsemester) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

அ .சே கோணவத்தை வடிச்சல் திட்டத்தை பார்வை கி.மா. கல்வி அமைச்சர் விமல வீர தலைமயிலான குழுவினர் அங்கு விஜயம்

Image
யு.எம்.இஸ்ஹாக் அட்டாளைச்சேனை, கோணாவத்தை வடிச்சல் திட்டத்தினை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தலைமையிலான குழுவினர் நேற்று  வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர். கோணாவத்தை வடிச்சல் திட்டத்தை உடன் நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்ட வாசிப்பின் போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம். நஸீர் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் உயரதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்வையிட்டனர்.

குரும்பை விழுந்து குழந்தை மரணம்

யு.எம்.இஸ்ஹாக்  தென்னை மரத்தில் இருந்து  குரும்பை வீழ்ந்து 03 மாதக் குழந்தை பரிதாப மரணமடைந்த சம்பவம் நேற்று 06.12.2013 வெள்ளிகிழமை  கல்முனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது;  கல்முனை மனச்சேனை  இலங்கை மின்சார சபை வீதியில் வசிக்கும்  ரமேஸ் தஷ்னி  ஆகியோரின்  புதல்வியான  திசோ ரமி என்ற  பெண் குழந்தையே  இவ்வாறு பரிதாபகரமாக மரணித்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த  தனது பிள்ளையை  தூங்க வைப்பதற்கு தோழில் அணைத்தபடி  தாய் அயல் வீட்டுக்கு சென்றவேளையே அந்த வீட்டு தென்னையில் இருந்து குரும்பை குழந்தையின்  தலையில் விழுந்துள்ளது . கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப் பட்டபோதே  அங்கு குழந்தை இறந்துள்ளதாக  கல்முனை பொலிசார் தெரிவித்தனர் 

அகில இலங்கை ஜமியதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச கிளைகளின் தெரிவு

Image
அம்பாறை மாவட்ட முஸ்லிம் கிராமங்கள்  நகரங்களில் உள்ள  ஜும்மா  பள்ளிவாசல்களுக்கான  2014 ஆம் ஆண்டுக்குரிய  நம்பிக்கையாளர் சபை தெரிவுகள்  மற்றும் அகில இலங்கை  ஜமியதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு  மற்றும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பிரதேச கிளைகளின்  தெரிவு என்பன அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் தலைவர்  தலைமையில்  இடம் பெறவுள்ளது.. இதற்கென அகில இலங்கை ஜமியதுல் உலமா சபையின் தலைவர்  அல் -ஹாஜ்  ரிஸ்வி முப்தி  அவர்களின்  தலைமையிலான  குழுவினர்  அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ளனர் . அதன் பிரகாரம்   நாளை 07.12.2013 ஆந்திகதி காலை 7.00 மணிக்கு பொதுவில் பிரதேசத்துக்கான  கூட்டம்   பொத்துவில்  ஜும்மா  பள்ளிவாசலிலும் , அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பிரதேச கூட்டம்  பிற்பகல் 2.00 மணிக்கு அட்டாளைச்சேனை சர்கியா அரபுக்கல்லூரி யிலும் ,நிந்தவூர் , ஒலுவில் ,பாலமுனை பிரதேசத்துக்கான  கூட்டம் பிற்பகல் 6.00 மணிக்கு  நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலிலும...

க.பொ.த (சா/த): வரலாற்றில் அதிகூடிய மாணவர், அதிகாரிகள் பங்கேற்கும் பரீட்சை

Image
5,78,140 மாணவர்கள் தோற்றுவர் * 76,000 அதிகாரிகள் * மாற்றுத்திறனாளிகள் * கைதிகளுக்கு விசேட ஏற்பாடுகள் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை வரலாற்றிலேயே அதிகூடிய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதும் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதும் இதுவே முதற் தடவை யாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. ஜே. எம். புஷ்பகுமார நேற்று தெரிவித்தார். எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாக வுள்ள க. பொ. த. சாதாரணதரப் பரீட் சையில் 5 இலட்சத்து 78 ஆயிரத்து 140 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ள அதேநேரம், 76 ஆயிரத்துக்கும் அதிகமான அதிகாரிகள் பரீட்சை கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். விண்ணப்பதாரிகளுள் சுமார் 20 ஆயிரம் பேர் இறுதி தறுவாயில் பரீட்சைக்கு சமுகமளிப்பது இல்லையென சுட்டிக்காட்டிய ஆணையாளர் நாயகம் ஒவ்வொரு மாணவர்க்கெனவும் அதிக பணம் செலவழிக்கப்படுவதனால், அவர்களை சமுகமளிக்கச் செய்வதில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதேவேளை வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் மூன்று பரீட்சார்த்திகளுக்கும் நாடு முழுவதுமிருந்து 510 மாற்று திறனாளிகளுக்கும் பரீட்சைக்கு ...

க.பொ.த. சா/த பரீட்சை:

Image
ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 10ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், கடந்த கால மற்றும் பரீட்சைக்கு வரலாமென ஊகிக்கப்படும் வினா மாதிரிகளை அச்சிட்டு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற் பாடுகளும் இன்று (04) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. ஜே.எம். புஸ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, இந்த விதிமுறையினை மீறி செயற்படும் தனியார் வகுப்புகள் அல்லது ஆசிரியர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இன்று புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பிரபல்யமாகவோ அல்லது இரகசியமாகவோ பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை இலக்கு வைத்து விசேட தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் அல்லது பரீட்சை மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் எவரேனும் ஈடுபடுவார்களாயின் அது குறித்த தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு உடனுக்குடன் பெற்றுத் தரவ...

கிழக்கில் நிலவும் இதே காலநிலை தொடரும்

Image
கிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், வடக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக் கூடுமென அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழையானது பிற்பகல் அல்லது இரவு வேளையில் பெய்யும் என்றும், சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும்காற்று வீசும் என்று குறிப்பிட்டிருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், மின்னல் தாக்கம் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரித்துள்ளது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவி ஸம்ஹா எழுதிய ஆங்கில கவிதை நூல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

Image
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் மாணவி ஸம்ஹா  எழுதிய ஆங்கில கவிதை நூல்   வெளியிடப்பட்டது. கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி எம்.பி்.பாத்திமா சம்ஹா எழுதிய   ' Breeze in Life'         எனும் ஆங்கில கவிதை நூல்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெறவுள்ள  இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசிம் பிரதம அதிதியாகவும் கல்முனை பிரதேச செயளாலர் எம்.எம்.நௌபல் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம்.சலீம் கௌரவ அதிதியாகவும் கல்முனை கல்வி வலயத்தின் ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலீல் விஷேட அதிதியாகவும் கலந்து கொள்வதுடன் பாடசாலையின் பிரதி,  அதிபர் திருமதி என்.பி.ஏ.கரீம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொணடு சிறப்பித்தார்கள். இம்மாணவி கடந்தவருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய பின் கிடைத்த விடு முறையில...

மரண விசாரணை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி

Image
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் 200 க்கும் மேற்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரிகள், மற்றும் சட்ட வைத்தியர்களுக்கான  மரண விசாரணைகள் மற்றும் சட்டநுனுக்கங்கள்  மருத்துவ அறிக்கை பற்றிய டிப்ளோமா பயிற்சி நெறி ஒன்று இன்று  ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு நீதி அமைச்சா; ரவுப் ஹக்கிமும் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஹிரிம்புருகம மற்றும் மருத்துவ பீட பேராசிரியர் ரவீந்திர பெணான்டோ ஆகியோர் தலைமையில் இன்று (30) சனிக்கிழமை  பொரலையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பயிற்ச்சி நெறிஒரு வருட தொலைக்கல்வி டிப்ளோமா பாடநெறியாக பயிற்றுவிக்கப்படுகின்றது. மரண விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகளில் மரணங்களில் ஏற்படும் சட்டங்கள், வைத்திய பரிசோதனை அறிக்கைகள் இராசயண பகுப்பாய்வுகள் பற்றிய அறிவுகளை மேம்படுத்துவதே  இப் பயிற்சி நெறியின் நோக்கமாகும். அமைச்சர் ரவுப் ஹக்கீம் இங்கு உரையாற்றுகையில் – இப் பயிற்ச்சி நெறியை அடுத்த வரும் காலங்களில்  இலவசமாக பயில்வதற்காக அடுத்து வருடம் வரவு செலவுத் திட்டத்தில் திரைசேரி அதிக...

முதற்தடவையாக நடத்தப்பட்ட விளையாட்டு உத்திகேத்தர்களுக்கான விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

Image
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக நடத்தப்பட்ட விளையாட்டு உத்திகேத்தர்களுக்கான விளையாட்டு விழாவில் தென்மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. ஏனைய மாகாணங்கள் முறையே மேல்மாகாணம், சப்பிரகமுவ, வடமேல் மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம், வடமாகாணம் ஆகியன அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டன. கடந்த வாரம் நாவலப்பிட்டி வெலியத்த மைதானத்தில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தலைமைத்தாங்கினார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற இந்த  இவ்விளையாட்டு விழாவில், 9 மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர் குழுக்கள் பங்கு பற்றின. இவ்விளையாட்டு விழா இறுதி நிகழ்வில், மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர், ஊவா மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நாவலப்பிட்டி நகர சபை முதல்வர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விளையாட்டு விழாவில், தடகள மெய்வல்லுனர், கிரிக்கட், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், உத...

கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல்

Image
கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு  வெள்ளிக்கிழமை மாலை இந்திய  தூதுவராலயத்தில் இடம்பெற்றது. கலந்துரையாடலில் துணை உயர்ஸ்தானிகர் கல்முனை நூலக அபிவிருத்தி, சுமார் 250மில்லியன் பெருமைதியான திண்மக்கழிவு அகற்றல் முகமைத்துவ வேலைத்திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி போன்றவற்றை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கல்முனை முதல்வர் நிசாம் காரியப்பரினால் இந்திய துணை உயர்ஸ்தானிகர் திரு குமரனை கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணை உயர்ஸ்தானிகரால் இந்தியாவின் கேரளா உள்ளூராட்சி அதிகார நிறுவத்தின்ஊடாக ( KILA )  கேரளாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு தொடர்பான கற்கை நெறியினை பயில்வதற்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் குழுவினை வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவரும்மான  ஏ.எம். ஜெமீல்,...

நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில்மாணவர்களை கல்வியில் விழிப்பூட்டும் வாகன பவனி

Image
யு.எம்.இஸ்ஹாக்  நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தில்  ஐந்தாம் தர புலமை பரிசு  சித்தியடைந்த மாணவர்கள்  கௌரவிப்பு விழாவும்  வாகன பவனி ஊர்வலமும் இன்று நடை பெற்றது. அதிபர் எம்.எல்.ஏ.கையூம்  தலைமையில் இடம் பெற்ற  நிகழ்வில்  பிரதி அதிபர் வீ .எம்,.சம்சம் ,பகுதி தலைவர் வை.ஏ.கே.தாசீம்  உட்பட ஆசிரியர்களும்  கல்முனை மாநகர  சபை நற்பிட்டிமுனை உறுப்பினர்களான  ஏ.எச்.ஏ.நபார்,சி.எம்.முபீத்  உட்பட  பெற்றோர்கள் நலன் விரும்பிகள்  என் பலர் கலந்து கொண்டனர். பாடசாலையில் இருந்து மேளதாளங்களுடன்  ஆரம்பமான  வாகன பவனி  சித்தியடைந்த மாணவர்களை  அலங்கரித்த வண்ணம்  கிராமத்தின் ஒவ்வொரு வீதியாக வலம் வந்தது. இந்த  ஊர்வலம்  கௌரவிப்பு என்பதை விட மற்ற மாணவர்களை  கல்வியில்  விழிப்பூட்டும் அமைப்பாகவே  இந்த நிகழ்வு இடம் பெற்றது.