Posts

கிழக்கில் திராட்சை உற்பத்தி : அமைச்சு நடவடிக்கை

Image
      கிழக்கு மாகாணத்தில் திராட்சை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு முன்வந்துள்ளது. வடபகுதியில் நீண்டகாலமாக திராட்சை உற்பத்தி வெற்றி கண்டுள்ளது. அதே நேரம் அதையொத்த கால நிலைகொண்ட கிழக்கிலும் இது வெற்றி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திராட்சை இறக்குமதிக்காக அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபா

நாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வை,குறைகளையும் கேட்டறிந்தார்.

Image
அம்பாறை நாவிதன்வெளி மக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று புதன் கிழமை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இச்சந்திப்பின் போது கிழக்கு மாகண முதலமைச்சருடன் மாகாண சபை உறுப்பின்ர் பூ.பிரசாந்தன் மற்றும் த.ம.வி.பு கட்சியின் அம்பாறை மாவட்ட  அமைப்பாளர் திரு. சத்திய சீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற 3020 மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும் பாரிய பாராட்டு விழா

Image
அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற 3020 மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும்  பாரிய பாராட்டு விழாத்தொடரில்  மூன்றாவது   நிகழ்வு நேற்று சனிக்கிழமை ;கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர்  மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனை  வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக்  கலந்துகொண்டார். அதிதிகள் வரவேற்கப்படுவதையும் அதிதிகள் பரிசுகளை வழங்குவதையும் படங்களில் காணலாம்.  

கிழக்கில் அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களும் ஆளுநரின் பணிப்பின் பேரில் இடைநிறுத்தம்

Image
கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான சகல இடமாற்றங்களும் மறு அறிவித்தல் வரை மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உபுல்வீரவர்தன தெரிவித்துள்ளார்.இம்மாகாணத்திலுள்ள சில கல்விவலயங்களில் அடிக்கடி இடம்பெற்றுவரும் ஆசிரியர் இடமாற்றங்களால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களில் தேவைக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் கடமையாற்றுவதனாலும் பாடசாலைகளுக்குப் பாடசாலை ஆசிரியர் சமமின்மை காணப்படுவதாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன.நகரப்புறங்களில் உள்ள சில பாடசாலைகளில் தேவைக்கு மேலதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்கள் பலர் நேர சூசி,வேலை எதுவுமின்றி இருப்பதாகவும் கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் கடமையில் உள்ள ஆசிரியர்கள் வேலைப்பளு கூடிய நிலையில் கடமையாற்றுவதாகவும் மாகாண கல்வித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இதனையடுத்து தேவைக்கு

இலங்கை அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைகிறது

Image
இலங்கை அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் அமைப்பு திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசுக்கு ஆதரவளித்து வந்தது. தாம் தொடர்ந்தும் எதிர்கட்சி வரிசையில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துவந்த நிலையில் இன்று அரசாங்கத்துடன் தாம் இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹ்சன் அலி தெரிவித்துள்ளார். இதேவேளை அரசாங்கத்தில் இணையவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு அமைச்சுப்பதிவியும் ஒரு பிரதி அமைச்சுப்பதவியும் வழங்கப்படவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன

சுனாமி ஆறாவது ஆண்டு நினைவு பிரார்த்தனை

Image
Rdhkp mdh;j;jk; Vw;gl;L 6MtJ Mz;il epidT$Wk;Kfkhf  mdh;j;jjpy; caph;ePj;jth;fSf;fhd JM gpuhh;j;jidAk;> fj;jKy; Fh;Md;  epfo;Tk; fy;Kid flw;fiug;gs;spthrypy;  jpq;fl; fpoik (8) ,lk; ngw;wJ.,];yhkpa `p[;up fhy ml;ltidapd;gb   ,j;jpdk; mD~;bf;fg;gl;lJ fy;Kid rP ];lhh; r%f Nrit mikg;gpd;; mDruizNahL epfo;j;jg;gl;l  epfo;Tfs; flw;fiu gs;spthry; Ng]pkhk;> nksytp m];n]a;apJ fyPy; nksyhd jiyikapy; ,lk; ngw;w NghJ gpbj;j glk;    

விற்பனைக்கு தயாராகவிருந்த மானிய உரம் கல்முன்யில் கண்டுபிடிப்பு

Image
விற்பனைக்கு  தயாராகவிருந்த  மானிய உரம்  கல்முன்யில் கண்டுபிடிக்கப்பட்டு  விசேட அதிரடி படையிரனால் கைப்பற்றப்பட்டுள்ளது . கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் இச்சம்பவம் இன்று காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது. காரை தீவு விசேட அதிரடிப்படை  மோட்டார் சைகள் பிரிவினரால் கைப்பற்றப் பட்ட  142  உர மூடைகள் கல்முனை பொலிசில் ஒப்படைக்கப் பட்டுள்ளது

மருதமுனையில் கஞ்சா செடி வளர்த்த சித்த வைத்தியர் கைது

Image
மருதமுனை அக்பர் வீதியில் கஞ்சா செடியினை வளர்த்து வந்த சித்தவைத்தியர் கல்முனைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து குறிப்பிடப்பட்ட சித்த வைத்தியரின் வீட்டினை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது 500 கிராம் கஞ்சா செடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குறிப்பிட்ட வைத்தியரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதமுனையில் போதை உற்பத்தி நிலையம்

மருதமுனையில் போதை உற்பத்தி நிலையம் கல்முனை பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அங்கிருந்து 14kg அரைத்த கஞ்சா தூள்,1.5kg  லேகியம்  உட்பட போதை பொருள் உற்பத்திக்கு பயன் படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்முனை கடலில் இரண்டு வள்ளங்கள் சேதம்

fly; nfhe;jspg;gpdhy; fy;Kidapy; ,uz;L glFfs; mbj;J nehWf;fg;gl;L Nrjkhd rk;gtk; ,d;W fy;Kidapy; ,lk; ngw;wJ. fly; nfhe;jspg;G fhuzkhf flypy; epWj;jp itf;fg;gl;bUe;j kPd; gpb glFfis kPdtu;fs; fiuf;F nfhz;L tu Kw;gl;l NghNj ,e;j mdu;jk; ,d;W ,lk; ngw;wJ. ghupa fly; miyf;Fs; rpf;Fz;l kPdtu;fs; jiuapy; epd;w kPdtu;fshy; fhg;ghw;wg;g gl;Ls;sdu;

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

Image
முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் எதிர்வரும் 4ஆம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடியில் திறந்து வைக்கப்படவுள்ளது என அறிய முடிகின்றது முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் செயற்பாடுகளை மாகாண மட்டத்தில் பரவலாக்கும் முகமாகவே இவ்வலுவலகம் திறந்து வைக்கப்படவுள்ளது இதன் இரண்டாவது பிராந்திய அலுவலகம் புத்தளத்தில் திறக்கப்படும் என்று வேறு சில தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது காத்தான்குடி பிராந்திய அலுவலத்தின் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 இற்கு மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் அரபு கலாசாலைகள் நன்மையடையும் என எதிர்பார்க்க படுகின்றது விரிவாக பார்க்க எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிராந்திய அலுவகத்தை திறந்து வைப்பார் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகம் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் இயங்கவுள்ளதுடன், இப்பிராந்திய அலுவலகத்த்திற்கென உதவி பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப

எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் நம்பவர் 20ஆம் திகதி கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸால்  நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, விவாதம் குழு நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கும் பரிசில்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபத் தலைவர் மர்{ஹம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினம் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையிலிருந்து வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்.

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இருந்து நான்கு பெரும்பான்மையின வைத்தியர்கள் உட்பட ஐந்து வைத்தியர்கள் சுகயீனு விடுமுறை எடுத்து வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்னும் பலர் வெளியேநவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவரின் மனைவி, தமக்கு விடுத்த அச்சுறுத்தலின் பேரிலேயே தாம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் செல்வதாக குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளளார். வெளியேறிச் செல்லும் நான்கு வைத்தியர்களும் நாளை சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், அமைச்சின் இணைப்பாளர் ஆகியோரை சந்தித்து, இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கவுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களான கிரிசாந்த, துல்மினி, நிமிர, மற்றும் அசோக்குமார் ஆகிய வைத்தியர்களே வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 25ஆம்திகதி புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம் செய்ய்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரஜைகள் உற்பத்தி கண்காட்சி

Image
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பிரஜைகளின் உற்பத்தி  விற்பனை கண்காட்சி சனிக்கிழமை காலை கல்முனை மெதடிஸ்த  மண்டபத்தில் நடை பெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக ஹெல்ப் ஏஜ் நிறுவன் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.பைலனாதன் கலந்து கண்காட்சிஏய் ஆரம்பித்து வைத்தார்

கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு

Image
      கிழக்கிலங்கை கிறிஸ்தவ வாழ்வு சமூகங்களின் வருடாந்த மகாநாடு கல்முனை திரு இருதய ஆண்டவர் மண்டபத்தில் மூன்று தினங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதிமேதகு ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களும், பிரதம அதிதியாக சிவில் ம

பெரியநீலாவனையில் கஞ்சா மீட்பு

Image
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவனை பகுதியில் இருந்து களுவாஞ்சிகுடி பொலிஸாரால் இன்றுகாலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்க்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம்.கருணாரட்ன ஆகியோரின் பணிப்புரைக்கமைய கல்முனை பகுதிகளில் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான குழுவினர் இந்த கஞ்சா போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். இதனடிப்படையில் இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை பொலிஸ் பிரிவுக்கும் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கும் எல்லைப்பகுதியாகவுள்ள பெரியநீலாவனைப்பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து இந்த கஞ்சா மீட்க்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார். சிவிலுடையில் கஞ்சா வாங்குவது போல் சென்ற பொலிஸார் குறித்த விற்பனைசெய்த இடத்தை கையுமெய்யுமாக பிடித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கஞ்சா பொட்டலங்கங்கள் உட்பட பொட்டலம் செய்யப்படவிருந்த கஞ்சாவை மீட்டதுடன் பெண்ண

அம்பாறையில் வரி செலுத்துதல் தொடர்பில் வர்த்தகர்களுக்கு விளக்கம் _

Image
    அம்பாறை மாவட்ட வரி மதிப்பீட்டு பிராந்திய அலுவலகத்தின் வரி செலுத்துதல் தொடர்பான செயலமர்வு சாய்ந்தமருது பெரடஸ் விடுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. செயலமர்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேடமாக கிழக்கு மாகாண சபை மேற்கொண்டு வருகின்ற வரி அறவீடு அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிக் காணப்பட்டத

500 அபின் பக்கற்றுகளுடன் மூன்று வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது

Image
      கல்முனையில் கஞ்சா கலந்த 5500 மதன கோகன அபின் லேகிய பக்கற்றுகளை விற்பனை செய்த 3 வர்த்தகர்களை இன்று மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை பொதுச் சந்தைக்குள் இரு வர்த்தக நிலையங்களைச் சுற்றிவளைத்த போதே இவ் வர்த்தக நிலையங்களிலிருந்து இப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக களுவாஞ்சக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்

Image
 மட்டக்களப்பு பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி வரும் டாக்டர் ரஹ்மான நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக டாக்டர் ஏ.எல்.எம்நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்.

Image
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சுகாதார வைத்தி யஅதிகாரியாகக் கடமையாற்றி வரும் எம்.எஸ்.எம்.ஜாபீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. சுகாரா அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேருவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதல் தடவையாக 12 வைத்தியர்கள் நியமனம்.

Image
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு முதல்தடவையாக ஒரேதடவையில் 12 டாக்டர்கள் நிமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் உதவி வைத்தய அத்தியட்சகர் டாக்டர கிரிசுதன் தெரிவித்தார். இவ் வைத்தியசாலைக்கு ஒரே தடவையில் நியமிக்கப்பட்ட அதிகூடிய டாக்கடர்கள் 8பேரே இதற்கு முன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்பு 3, 4 என்றே நியமிக்கப்பட்டதுண்டு. இதைப்பல தடவைகள் சுகாதார அமைச்சியல் நடைபெற்ற கூட்டங்களிலும் சுட்டிக்காட்டியிருந்த வைத்தியசாலை அத்தியட்சகர் சா.இராஜேந்திரனின் முயற்சி காரணமாகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கல்முனையில் சட்டவிரோதஒளிபரப்பு நிலையம்முற்றுகை

Image
கல்முனையில் சட்ட விரோதமாக இயங்கி வந்த ஒளிபரப்பு நிலையம் இன்று கல்முனை பொலிசாரால் முற்றுகை இடப்பட்டது. நிலைய உரிமையாளர் கைது செயப்பட்டதுடன் இலத்திரனியல் உபகரணங்களும் கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளன 

ரவுப் ஹக்கீமின் மற்றுமொரு திரு விளையாடல்

Image
தொடர்பாடல் பரிமாற்ற தாமதம் காரணமாகவே  உள்ளூராட்சி  சீர்  திருத்தத்தை எதிர்த்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் வாக்களித்து விட்டார் என  ரவுப் ஹக்கீம் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும். உள்ளூராட்சி  சீர்  திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் கடந்த 17.10.2010 ஆம் திகதி வீர கேசரி பத்திரிகைள் தெளிவாக அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கை இணைக்கப் பட்டுள்ளது .

சாய்ந்தமருது கடற்கரையில் குண்டுகள் மீட்பு

Image
கல்முனை சாய்ந்தமருது கடற்கரையில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கல்முனை பொலிஸார் குறித்த இடத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கடற்கரை பகுதியில் இருந்து 5 மோட்டார் ஷெல்கள் மற்றும் ஒரு சாதாரண குண்டு என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தக் குண்டுகள் உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப்பொருள் தகவல் வழங்க 8 தொலைபேசி இலக்கங்கள்!

Image
4 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்கள் போதைப்பொருள் இரகசியத் தகவல்களை வழங்க 8 தொலைபேசி மற்றும் 4 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியூள்ளது. போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸ் விசேட போதைப் பொருள் பிரிவூக்கு தகவல்களை வழங்கும் பொருட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுளளது. போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களை முற்றாக ஒழிக்கும் பொருட்டு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவூ ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் பாவனை குற்றச் செயல்கள் மற்றும் விற்பனை தொடர்பிலான இரகசியத் தகவல்களை பின்வரும் தொலைபேசி அல்லது தொலை நகல் இலக்கங்களுக்கு நேரடியாக அறிவிக்கலாம். தொலைபேசி இலக்கங்கள். 011- 3182910 011- 3188745 011- 3081010 011- 3182903 011- 3081005 011- 3133655 011- 3081039 011- 3081033 தொலை நகல் (பக்ஸ்) இலக்கங்கள் 011- 2472757 011- 2325391 011- 2542520 011- 2440435