கிழக்கில் அனைத்து ஆசிரியர் இடமாற்றங்களும் ஆளுநரின் பணிப்பின் பேரில் இடைநிறுத்தம்


கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான சகல இடமாற்றங்களும் மறு அறிவித்தல் வரை மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உபுல்வீரவர்தன தெரிவித்துள்ளார்.இம்மாகாணத்திலுள்ள சில கல்விவலயங்களில் அடிக்கடி இடம்பெற்றுவரும் ஆசிரியர் இடமாற்றங்களால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களில் தேவைக்கு மேலதிகமாக ஆசிரியர்கள் கடமையாற்றுவதனாலும் பாடசாலைகளுக்குப் பாடசாலை ஆசிரியர் சமமின்மை காணப்படுவதாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன.நகரப்புறங்களில் உள்ள சில பாடசாலைகளில் தேவைக்கு மேலதிகமாக கடமையாற்றும் ஆசிரியர்கள் பலர் நேர சூசி,வேலை எதுவுமின்றி இருப்பதாகவும் கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனால் கடமையில் உள்ள ஆசிரியர்கள் வேலைப்பளு கூடிய நிலையில் கடமையாற்றுவதாகவும் மாகாண கல்வித்திணைக்களத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.இதனையடுத்து தேவைக்கு மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை பற்றாக்குறையான வலயங்களுக்கு வழங்கும் விசேட செயற்றிட்டமொன்றை கிழக்கு மாகாணக்கல்வித்திணைக்களம் மேற்கொண்டுள்ளது.பாடசாலைகளுக்கிடையே காணப்படும் ஆசிரியர் சமமின்மையை உடனடியாக நீக்குமாறு வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னரே ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்