கிழக்கில் திராட்சை உற்பத்தி : அமைச்சு நடவடிக்கை
வடபகுதியில் நீண்டகாலமாக திராட்சை உற்பத்தி வெற்றி கண்டுள்ளது. அதே நேரம் அதையொத்த கால நிலைகொண்ட கிழக்கிலும் இது வெற்றி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராட்சை இறக்குமதிக்காக அரசு வருடாந்தம் 500 மில்லியன் ரூபாவைச் செலவிடுவதாகவும் இத்தொகையின் ஒரு பகுதி சேமிக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை ஈட்டித் தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் திராட்சை உற்பத்தி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. __
Comments
Post a Comment