முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது
காத்தான்குடி பிராந்திய அலுவலத்தின் ஊடாக
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள 750
இற்கு மேற்பட்ட மஸ்ஜிதுகள் மற்றும் அரபு கலாசாலைகள் நன்மையடையும் என
எதிர்பார்க்க படுகின்றது விரிவாக பார்க்க
எதிர்வரும் 4ஆம் திகதி மட்டக்களப்பு
மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் டி.எம்.ஜயரட்ன இப்பிராந்திய
அலுவகத்தை திறந்து வைப்பார் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கிழக்கு
மாகாண பிராந்திய அலுவலகம் தற்காலிகமாக காத்தான்குடி ஹிஸ்புல்லா இஸ்லாமிய
கலாச்சார நிலையத்தில் இயங்கவுள்ளதுடன், இப்பிராந்திய அலுவலகத்த்திற்கென
உதவி பணிப்பாளர் ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார் என்று செய்திகள்
தெரிவிக்கின்றன