சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பின் இரத்ததான நிகழ்வு
சாய்ந்தமருது செஸ்டோ அமைப்பின் ஏற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இரத்ததான நிகழ்வு இன்று கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நடைபெற்றது. செஸ்டோ அமைப்பின் தலைவர் பொறியியலாளர் எஸ்.எச்.எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.எம்.எஸ். வெலிகடராச்சி, என்.எம்.மெடகொடகெட்டி மற்றும் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பு தாதி உத்தியோகத்தர் எஸ்.எச்.ஹனீம் ஆகியோரின் வழி நடத்தலில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் செஸ்டோ அமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.