மூக்கில் மூளையுடன் பிறந்த அதிசய குழந்தை!


எல்லோருக்கும் தலையினுள் தான் மூளை உள்ளது. ஆனால் இந்த அதிசயக்குழந்தைக்கோ மூக்கின் மேலே மூளை .இதனால் மிகவும் பரிதாபகரமான தோற்றத்துடன் காணப்பட்ட இந்த குழந்தையை இக்குழந்தையின் பெற்றோர் பெருங்கவலையடைந்தனர்.

 குழந்தையின் இக்குறைபாட்டை தாயின் கருவறையில் 5 மாத கருவாக இருக்கும் போதே  அவதானிக்க முடிந்ததாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இந்தப் பெற்றோர் குழந்தை பிறந்ததும்  மருத்துவர்களின் உதவியை நாடினர் .  பொஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு   சத்திர சிகிச்சை மூலம் மூக்கில் இருந்த மூளையை ,  குழந்தையின் மண்டயோட்டிற்குள் உரிய இடத்தில்  பொருத்தி விட்டனர்



மிகவும் நுணுக்கமாக நடந்த இந்த  சிகிச்சையில் டாக்டர்கள் வெற்றியும் கண்டனர் .இந்தக் குழந்தையும் தற்சமயம் ஆரோக்கியமாக இருக்கிறதாம்..இதனால் இப்போது தான் இக்குழந்தையின் பெற்றோர் நிம்மதியாக மூச்சு விடுகின்றனராம். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்