கல்முனை நகர அபிவிருத்தித் திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்
கிழக்கின் ஆச்சரியமிக்க நகரமாக கல்முனை நகரினை மாற்றும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸினால் கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமால் பெரேராவுக்கு விடுத்த வேண்டுகோளை அடுத்தே மேற்படி குழுவினர் கல்முனைக்கு விஜயம் செய்தனர்.
இக்குழுவில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் டவுள்யூ.ஜே.செனவிரட்ன, கல்முனை நகர அபிவிருத்தி அதிகார சபைக் காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் எம்.முர்சிதா மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இதன்போது புதிய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரச காரியாலய மற்றும் வர்த்தக நிலையங்களின் அமைவிடங்களையும் மற்றும் பூங்கா நிர்மாணம், நகர அழகுபடுத்தல் வேலைத்திட்டங்;களையும் குழுவினர் பார்வையிட்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டன.
Comments
Post a Comment