பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை ஜூலை 6ஆம் திகதி!
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை ஜூலை மாதம் 6ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்.
அவ்வாறே, உதவி சுங்க அத்தியட்சகர் தரம் 11க்காக வினைதிறன் பரீட்சை மற்றும் 2012-2013 ஆம் ஆண்டுக்கான சுங்க பரிசோதகர் தரம் 11க்கு ஆட்களை தெரிவு செய்வதற்கான போட்டிப்பரீட்சையும், ஜூலை 7ஆம் திகதி கொழும்பில் நடைபெறும்
இந்த பரீட்சைகள் தொடர்பான மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் பத்தரமுல்லை, பெலவத்தையிலுள்ள இலங்கை பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Post a Comment