முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு!
-அமைச்சர் கெஹெலிய தகவல்-
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில அமைப்புகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த உடகவியலாளர் சந்திப்பு இன்று (20) பிற்பகல் தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்;லிம் சமுகத்துக்கு எதிரான செயற்பாடுகளில் சில பொளத்த அமைப்புக்கள் தொடர்ந்தும் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் - அவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தடுத்து நிறுத்தும். இது தொடர்பில் உரிய அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Comments
Post a Comment