முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அவரச கூட்டத்துக்கு அழைப்பு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையில் அவரச கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் அக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நாளை (17) இரவு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்டீன் தெரிவித்தார்.
நேற்று (15) இரவு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
13 திருத்தச் சட்ட மாற்றங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு சந்திப்பாக இது அமையவுள்ளது.
13 திருத்தச் சட்ட மாற்றங்கள் குறித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் திருத்தச் சட்டம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸும் அந்த தெரிவுக்குழுவில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் கட்சி எடுத்துள்ள சில முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் கட்சியின் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment