அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நாடெங்கும் பயிற்சி பாசறை

லஞ்ச விசாரணை ஆணைக்குழு, மாகாணசபைகள், பிரதேச சபைகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கும் அங்கு பணி புரியும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் வாங்குதல் எவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிவுறுத்தும் விரிவுரைகளை நாடெங்கிலும் நடத்துவதற்கான ஒழுங்குகளை செய்கின்றது.
லஞ்சம் வாங்கும் குற்றச் செயலில் ஈடுபடுவோர் எவ்விதம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை விளக்கக்கூடிய வகையில் இந்த விரிவுரைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச விசாரணை ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதி பதியின் சட்டத்தரணியுமான ஜகத் பாலபட்டபந்தி தெரிவித்துள்ளார்.
தற்போது பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக இத்தகைய லஞ்ச குற்றச்சாட்டுகள் அதிகமாக ஆணைக்குழுவுக்கு முன் பதிவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பயிற்சி பாசறைகளை நடத்துவது குறித்து லஞ்ச விசாரணை ஆணைக்குழு முன்கூட்டியே மாகாணங்களின் ஆளுநருக்கு அறிவிக்கவும் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதத்தில் இதன் முதலாவது பயிற்சி பாசறை அனுராதபுரம் மாவட்டத்தில் நடத்தப்படும். இது பற்றி முன்கூட்டியே வட மத்திய மாகாண ஆளுநருக்கும் ஆணைக்குழு அறிவிக்கும் என்றும் அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்