கல்முனைப் பிரதேசத்தில் 51 வகையான அபிவிருத்தி திட்டங்கள்!

ஒளிரும் கல்முனை’ எனும் தொனிப்பொருளில் கல்முனைப் பிரதேசத்தில் 51 வகையான துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரிஸின் ஏற்பாட்டில் நடைபெற்றது,
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ்,
கல்முனையை துரிதமாக பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்காகவே ‘ஒளிரும் கல்முனை’ என்ற பெயரை இந்த அபிவிருத்தித்திட்டத்திற்கான பெயராக சூட்டியுள்ளோம்.இதில் கல்வி, வீதி அமைப்பு, வடிகான் வசதி, கலாசார மேம்பாடு என 51 வகையான வேலைத்திட்டங்களை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட வேலை எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கு இப்பகுதியில் உள்ள மாகாண சபை உறுப்பினர்கள், மேயர் உட்பட கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்பும் எனக்கு கிடைக்கும். அனைவரின் ஆலோசனையின் படியே இத்திட்டத்தை முன்னெடுக்கவும் உள்ளேன்.
கல்முனைப் பகுதி என்பது பல்லின மக்கள் ஒன்றாக வழும் பகுதியாகும். இதில் எந்த வேறுபாடுகளும் காட்டாமல் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.காரியப்பர், எம்.சீ.அஹமட், ஏ.ஆர்.மனசூர், எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் பேரியல் அஷ்ரப் போன்றவர்கள் சேவையாற்றியுள்ளார்கள். அதன் அடிப்படையில் இச்சேவையும் அமையும் என்பதோடு ஒரேநேரத்தில் இப்படியான பலசேவைகள் எனது காலத்தில் நான் முன்னெடுப்பதையிட்டு நான் பெறுமிதமடைகிறேன் என்றார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது