இரணைமடு விமான ஓடுதளத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்
விடுதலைப் புலிகளால் நிர்மாணிகப்பட்ட இரனைமடு வானூர்தி ஓடு தளம் மறுசீரமைக்கப்பட்டு இன்று மீண்டும் ஜனாதிபதியால் அங்குரார்பனம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இரணைமடு விமான ஓடுதளத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார் . இந்த ஓடுதளம் 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டுள்ளது. விமானப்படையினரின் பொறியியல் நிர்மாண- உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே இரணைமடு விமான ஓடுதளம் மறுசீரமைக்கப்பட் டுள்ளது.
சர்வதேச ரீதியில் இந்த விமான ஓடுதளம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விமானப் படையிடம் இருக்கும் மிகப் பெரிய விமானமான சீ-130 விமானத்தை ஏற்றி இறக்கக் கூடிய வகையில் குறித்த விமான ஓடுதளம் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம், அம்பகாமம் ஓலுமட ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் சென்று விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் இரணைமடு ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப் பட்டுள்ளது .
Comments
Post a Comment