கல்முனை சனிமவுண்ட் கழகம் சம்பியன்
மருதமுனை எஸ். பி. ஜமால்தீன் பவுண்டேசன் அநுசரணையுடன், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட முன்னணிக் கழகங்களுக் கிடையே நடாத்தி வந்த மர்ஹும் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த வெள்ளிக் கிழமை மருதமுனை மஷ¤ர் மெளலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் கல்முனை சனிமவுண்ட் விளையாட்டுக்கழகம், தன்னை எதிர்கொண்ட மருதமுனை கோல்ட்மைன்ட் விளையாட் டுக்கழகத்தினை பலத்த சவால்களுக்கு மத்தியில் (04.03) கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டு ரூபா பத்தாயிரம் பணப் பரிசினையும், சம்பியன் கிண்ணத்தினையும் பரிசாகப் பெற்றுக்கொண்டது.
இரண்டாம் இடத்தினைப் பெற்ற மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் ரூபா ஐந்தாயிரம் பணப் பரிசினையும், கிண்ணத்தினையும் பெற்றுக் கொண்ட துடன், மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட கல்முனை லக்கிஸ்டார் விளையாட்டுக் கழகம், நான்காம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட மருதமுனை ஈஸ்ரன் யூத் விளையாட் டுக்கழகம், முறையே ரூபா மூவாயிரம், ரூபா இரண்டாயிரம் பணப் பரிசினையும், பரிசுக் கிண்ணங்களையும் பரிசாகப் பெற்றுக்கொண்டன.
Comments
Post a Comment