ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் ஜூலையில் திறப்பு?
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி ஒலுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகத்தை எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பணிப்புரை விடுத்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் விடுத்த வேண்டுகோளை ஏற்றே ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அரச தரப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஜனாதிபதியின் கவனத்திக்கு கொண்டு வந்தார்.
குறிப்பாக இப்பகுதி ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்த பைசால் காசிம் எம்.பி. ஒலுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீனவர் துறைமுகம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போதே அங்கு சமூகத்திருந்த கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கி வருகின்ற வேறு பல பிரச்சினைகள் குறித்தும் தேவைகள் தொடர்பாகவும் தாம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக பைசால் காசிம் எம்.பி. தெரிவித்தார்.

Comments
Post a Comment