கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.

 சுனாமியால் பாதிக்கப்பட்ட, அனர்த்தங்களால் விதவையான, யுத்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்த வசிப்பிடமற்ற மக்களுக்கு இந்த வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அந் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இஸ்கந்தர் கே. ஒக்யே, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீமிடம் தெரிவித்தார்.

அமைச்சர் ஹக்கீம், துருக்கிய தூதுவர் ஒக்யே ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட் கிழமை (17) நீதியமைச்சில் இடம்பெற்ற போது அமைச்சர் ஹக்கீம் இருப்பிட வசதியின்றி அல்லறும் மக்கள் பற்றி பிரஸ்தாபித்த போதே துருக்கியத் தூதுவர் இதனைத் தெரிவித்தார். 

இச் சந்திப்பில் துருக்கி - இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் உயர் அதிகாரி அய்டின் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமத், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரத்தை துருக்கியில் உள்ள ஒரு முக்கிய நகரின் சகோதர நகராக ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான தீர்மானமொன்றும் இச் சந்திப்பின் போது எட்டப்பட்டது. அது தொடர்பில் இரு நாட்டு முக்கியஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றும் மிக விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி