63.5 கி.கி விதையுடன் அவதிப்பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை!!(PHOTOS)

63.5 கி.கி விதையுடன்அவதிப்பட்ட லாஸ் வெகாஸைச் சேர்ந்த நபரொருவருக்கு வைத்தியர்கள். அறுவை சிகிச்சைமூலம் அவற்றை நீக்கி புத்தம் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் மாநிலத்தைச் சேர்ந்த வெஸ்லி வரென் என்ற 48 வயதான நபருக்கே இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் 2008ஆம் ஆண்டு படுக்கையிலிருந்து எழும் போது தவறுதலாக அவரது ஆணுறுப்பு கட்டிலுடன் மோதியுள்ளது. இதன் பின்னர் அவரது ஆணுறுப்பில் வலி ஏற்பட்டுள்ளது.
மேலும் விதைப்பை பெரிதாக வீங்க ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து அவரால் இயல்பாக நடக்கவோ வாகனம் செலுத்தவோ உடலுறவுகொள்ளவோ முடியாத ஒரு அசாதாரண நிலைக்கு ஆளாகியுள்ளார் வெஸ்லி வரென். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவரது விதைப்பையின் வீக்கம் மிக அதிகமானபோது அதனை 13 மணி நேர அறுவைசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர் வைத்தியர்கள். இது குறித்த தகவல்களை நேற்றைய தினமே அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டன.
இதேவேளை 13 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையை சனல் 4 தொலைக்காட்சி முழுமையாக படம் பிடித்துள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள வரென் கூறுகையில், சத்திர சிகிச்சையின் மூலம் புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளேன். மேலும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. எனது வாழ்க்கை மீட்டுத்தந்தமைக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்