ஐ.தே.க.யின் உத்தேச அரசியல் அமைப்பு நகல் ரவூப் ஹக்கீமிடம் கையளிப்பு
ஐக்கிய தேசிய கட்சி தயாரித்துள்ள உத்தேச அரசியல் அமைப்பு நகல் பிரதிகள் அக் கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவினால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், இன்று முற்பகல் கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியை மாற்று அரசாங்கமாக கருதுவதாகவும், முன்வைக்கப்பட்ட உத்தேச அரசியல் அமைப்பு நகலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நன்கு பரிசீலித்து அது தொடர்பான அபிப்பிராயங்களை தெரிவிக்கும் என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். இந்தச் சந்திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் பங்குபற்றினர்.
Comments
Post a Comment