ஈரான் ஜனாதிபதியாக ஹசன் தெரிவு
ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹசன் ரௌஹானி தெரிவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தநாட்டின் மறுசீரமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் டம்பெற்ற தேர்தலில், ஹசன் ரௌஹானி 50 சதவீதமான வாக்குகளை பெற்று, தெளிவான வெற்றியை பதிவு செய்துள்ளார்.
தமது வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரௌஹானி, கடும்போக்குக்கு கொள்கைளை வெற்றிக் கட்டுப்படுத்தும் வகையில் தமது வெற்றி அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெஹ்ரான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட, அமெரிக்காவும் இணக்கம் வெளியிட்டுள்ளது.
Comments
Post a Comment