அரசசேவை விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கத்தின் அரசாங்க சேவையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் உத்தியோகத்தர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக 2013 க்கான பின்வரும் போட்டிகளை நடாத்தப்பட உள்ளன. இந்த போட்டிகள் தொடர்பாக சகல திணைக்களங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அரசசேவை உத்தியோகத்தர்களிடையே கரம், கிரிக்கெட், செஸ், உதைபந்து, பெட்மின்டன்,, ஹொக்கி, மேசைப்பந்து, கரப்பந்து, எல்லே, வலைப்பந்து, மெய்வல்லுனர் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. மேற்படி போட்டிகள் யாவும் கொழும்பில் ஜுலை மாதம் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றும் அரச ஊழியர்கள் தங்களுடைய பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை திணைக்கள தலைவர் ஊடாக செயலாளர், இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கம் 2/12, 216 பொல்ஹெங்கொட வீதி, நாரஹேன்பிட்டிய, கொழும்பு-05 எனும் முகவரிக்கு எதிர்வரும் ஜூன் 26க்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டுமென மேற்படி சங்கம் அறிவிக்கின்றது.