Posts

Showing posts from September, 2010

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம்

Image
இன்று புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது  கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.  இவ் ஆர்ப்பாட்டத்தில், 50 பேர்  அளவிலான  ஒரு குழுவினர்   கலந்துகொண்டனர் . காலை 9.30 மணி அளவில் ஆரம்பமாகி  10.30 வரை ஆர்பாட்டம் நடை பெற்றது. இதேநேரம் இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பீ. பியசேன,  சமரச முயற்சி எடுத்த  போதிலும் அது கைகூடவில்லை  வைத்திய பணிப்பாளருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறி அவருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப் பட்டன. வைத்திய சாலைக்குள்  அரசியலை நுழைக்க வேண்டாம் .எனவும் அவர் தெரிவித்தார். வைத்திய சாலை சேவைகளை பொறுக்கமுடியாதவர்களின்  காவாலி தனமே இந்த ஆர்பாட்டம் என வைத்திய அத்தியட்சகர் கருது தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில்

Image
 கல்முனை பொலிஸ் நடமாடும் சேவை மருதமுனையில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட  சேவைகள் இடம் பெற்ற  இந்நிகழ்வில் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய ,கல்முனை அஸ்ரப் ஞாப கார்த்த வைத்திய சாலை அத்தியட்சகர் எ.எல்.எப்.ரகுமான்,அம்பாறை மாவட்ட மோட்டார் வாகன் பரிசோதகர் எ.எல்.எம்.பாரூக் ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்.எம்.மென்டிஸ்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா  ஆகியோர் கலந்து கொண்டனர். Mr.Ranjith veera sooriya (Amparai D.I.G) அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் வீர சூரிய இரத்த தானம் வழங்கி பொலிஸ் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

சிறைக்கூட பொறுப்பதிகாரி இடை நிறுத்தம்

கல்முனை சிறைக்கூடத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஒருவர் வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் சிறைக்கூட உத்தியோகத்தர்கள் மூவருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலை ஆணையாளருக்கு இலங்கை சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் பி.ஆர்.டி.சில்வா அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2ஆம் திகதி மாலை அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு கைதிகள் இருவரை கொண்டு சென்று தனியார் வான் ஒன்றில் கல்முனை சிறைக்கூடத்துக்கு கொண்டுவரும் வழியில் இரு கைதிகள் அட்டாளச்சேனை,பாலமுனை பள்ளிவாயலுக்கு அருகில் விலங்குகளுடன் தப்பிச்சென்றனர். இதன்போது குறித்த கைதியை நீதிமன்றுக்கு கல்முனை சிறைக்கூடத்தில் இருந்து ஒரு பொறுப்பதிகாரி உட்பட நால்வர் குறித்த கைதிகளுடன் சென்றிருந்தனர். இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த கைதிகளை கொண்டு சென்றவர்களில் ஒருவரான பொறுப்பதிகாரிக்கு காலவரையறையின்றி வேலை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மறு அறிவித்தல் வரும் வரை ஏனைய மூன்று சிறைக்கூட உத்தியோகத்தர்களுக்கும் உடனடியாக அமுலுக்கு ...

பாண்டவர் வரலாறு கூறும் தீப்பள்ளயம் உற்சவம் இன்று தீ மிதிப்புடன் நிறைவு

Image
மகா பாரதக் கதையின் கதாநாயகி யான திரெளபதை அம்மனுக்கு இலங்கையில் அமைக்கப்பட்ட ஆலயங்களில் கல்முனைக்கு வடக்கே 3 கி.மீ. தூரத்திலுள்ள பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலயம் முதன்மையும் முக்கியத் துவமும் பெற்றுள்ளது. அன்னையின் அருளால் நோய் பிணி தீர்ந்தவர் களும் பட்டம், பதவி பெற்றவர் களும் திருமணம், குழந்தைச் செல்வம் முதலான இஷ்ட் சித்திகளை பெற்றவர்களுமான அடியார்கள் அன்னையின் அற்புதம் பற்றிக் கூறுவர். இவ்வாலயத்தின் வருடாந்தப் பெருவிழா செம்டம்பர் 7ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 24ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தீமிதிப்புடன் நிறைவுறுவதற்கு அம்மனின் அருள் கிடைத்துள்ளது.

தமிழ் பிரிவில் கல்முனை மாணவி முதலிடம்

Image
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவின்படி தமிழ் பிரிவில் 193 புள்ளிகளை பெற்று கல்முனை தம்புலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மலவன் சுபதா முதலிடம் பெற்றுள்ளார். கல்முனை நியூஸ் இணைய தளம் சுபதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது

கல்முனையில் இன்று வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்

Image
கல்முனையில்  வாகன விபத்து  ஒருவர் பலி இருவர் படு காயம்  இச்சம்பவம் இன்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது .உளவு இயந்திர விபத்தின் போதே  17 வயதுடைய நற்பிட்டிமுனை முகம்மது நாபி முகம்மது அரசத்  என்பவர் மரணமாகி உள்ளார்  மரணிதவரின் தந்தையே  குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிசார்  தெரிவிக்கின்ற்றனர்.

சட்ட விரோத மண் அகழ்வோர் கல்முனையில் கைது

Image
சட்ட விரோத மாக  மண் அகழ்வோர் கல்முனையில் கைது  செயப் படுகின்றனர் . இவ்வாறு மண் அகழ்வில் ஈடு பட்ட  சாய்ந்தமருதை சேர்ந்த மூன்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் கல்முனை பொலிசாரினால் கைது செயபபட்டு  நேற்று நீதி மன்றில் ஆஜர் படுத்தப் பட்டதன் பின்னர் சந்தம் வழங்கப் பட்டு விடு தலை செயப்பட்டுள்ளனர்.

கல்முனையில் சட்ட விரோதமாக மீன்பிடித்தவர் கைது

Image
கல்முனைக்குடி பகுதியில் சட்டவிரோத உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மீன்பிடிப்பதற்காக அவர் பயன்படுத்திய டைனமைட், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு குண்டுகள், விசப்படகு மற்றும் 350 கிலோ கிராம் மீன் உள்ளிட்டவை இவரிடமிருந்து  பறி முதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த சந்தேகநபருடன் இணைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் மூவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் சுனாமி அகதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்ட பதினைந்து வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன

Image
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியினால் சுனாமி அகதிகளுக்கென நிர்மாணிக்கப்பட்ட  பதினைந்து வீடுகள் பாழடைந்த நிலையில் உள்ளன . இந்த வீட்டுத்திட்டம் நாவிதன் வெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாலாம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிக்கப்பட்ட இவ் வீட்டுதிட்டத்தில் குடி நீர்,மின்சாரம் இல்லை என்றாலும் வீடில்லதவர்களுக்கு இவ் வீடுகள் வழங்கப்படவில்லை என்ற குற்ற சாட்டு பரவலாக பேசப்படுகின்றது. வீட்டுத் திட்டத்தில்   குடியமர்த்த பட்டவர்கள் மருதமுனை,கல்முனைக்குடி,சாய்ந்தமருது பிர்தேசதவர்களாகும் . இவர்கள் தற்போது அவர்களது சொந்த இடங்களில் வசித்து வருகின்றனர்.

மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிப்பு

Image
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று (19-09-2010) மட்டக்களப்பில் துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரின் பல இடங்களில் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.  கரடியனாறில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் துக்கதினம் அனுஸ்டிக்குhறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.

திருகோணமலையில் மாகாண ஆளுநர்களின் 13 ஆவது தேசிய மாநாடு

Image
மாகாண ஆளுநர்களின் 13 ஆவது தேசிய மாநாடு திருகோணமலையில் இன்று ஆரம்பமானது. நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இம்மாநாட்டுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்களில் சிலரான விமலதீர திஸநாயக்க, எம்.எஸ்.சுபைர், துரையப்பா நவரட்ணராஜா, கிழக்கு மாகாண சபை தவிசாளர் எம்.பாயிஸ் மற்றும் பிரதித் தவிசாளர் ஆரியவதி கலபதி, திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ரஞ்சித் சில்வா, மாகாண ஆளுநர்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோரும் கலந்து

புலமைப் பரிசில் முடிவுகள் இம்மாத இறுதியில்

Image
தரம் 05 புலமைப் பரிசில் முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகின்றன. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இப்பரீட்சை கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றது. 2744 பரீட்சை நிலையங்களில் 316,000 மாணவர்கள் தோற்றி இருக்கின்றார்கள். விடைத் தாள்களைத் திருத்தும் பணிகள் கடந்த 04 ஆம் திகதி ஆரம்பமாகி நிறைவடைந்து விட்டன என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்

Image
மட்டக்களப்பு கரடியனாறு இன்று காலை 11.30 அளவில் ஜும்மாஹ் தொழுகைக்கு சற்று முன்னர் கரடியனாறு போலீஸ் நிலையத்தில் களஞ்சியப் படுத்தி வைக்கபட்டிருந்த சீனா கட்டிட நிர்மான பணியாளர்களின் வெடிமருந்துகள் வெடித்ததில்  62 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன போலிஸ் நிலையம், அதிரடி படை முகாம், கமநல சேவைகள் நிலையம் என்பனவும் முற்றாக சேதமடைந்துள்ளது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன உயிரிழந்தவர்களில் இரண்டு சீன பிரஜைகளும் ஏராவூரை சேர்ந்த ஐயூப் கான் என்ற பொலிஸ் உத்தியோகர்தவரும் அடங்குவதாகவும் அறிய முடிகின்றது பிந்திய செய்தி சற்று முன்னர் வரையும் 27 உடல்கள் மாத்திரம் சிதைந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. படங்களை பார்க்க

மருதமுனையில் இலவச கத்னா வைபவம்

Image
மருதமுனை மானியங்கள் சேவைகளுக்கான வாரியத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பரீஸ் பேக்கரி நிறுவனத்தின் அனுசரணையில் 31 வறிய சிறுவர்களுக்கு இலவச கத்னா வைபவம்  இன்று வெள்ளிக்கிழமை மருதமுனை மத்திய வைத்திய சாலையில் நடை பெற்றது. அக்கரைபற்று ஆதார வைத்திய சாலை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர்.எஸ்.எஸ்.ஜெமீல் வழி  காட்டலில் சிறப்பாக இடம்பெற்றது.

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று

Image
மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது  ஆண்டு நினைவு தினம் இன்று கல்முனையில்  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்  தலைமையில் இடம் பெற்றது. அஸ்ரப் அழியா பொக்கிஷம்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் வபாத்தாகி அல்லது கொல்லப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது இவர் 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி ஒன்றில் பயணிக்கும் போது வபாத்தானார். இவர் 1986.11.29 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முஸ்லிம் சமூக நிறுவனத்தை ஒரு அரசியல் கட்சியாக பிரகடனம் செய்து வைத்தார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் வளர்ச்சி ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் எழுச்சியாகத்தான்  பார்க்க படுகின்றது சரணாகதி அரசியலுக்கு பதிலாக பேரம் பேசும் அரசியல் பலத்தை முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பெற்று கொடுத்தது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் வேறு எந்த முஸ்லிம் வாதிகளும் செய்ய தயங்கிய விடையங்களை அஷ்ரப் துணிவுடன் நடத்தியபோதும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களை முழங்கி இஸ்லாமிய அரசியல் தோற்றத்தை முஸ்லிம் சம...

நேரப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள்

Image
கிழக்கு மாகாணத்தில் உள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் நேரப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.டி .ஏ. நிஸாம்  தெரிவித்தார். அரச அலுவலகங்களுக்கு நேரத்திற்கு ஊழியர்களை வருகை தருவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் இவ் இயந்திரங்கள் பொருத்தப்படுவதாகவும், இவ் இயந்திரங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் பொருத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இம் மாகாணத்திலுள்ள 15 வலயக்கல்வி அலுவலகங்களில் இவ் இயந்திரங்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலில் மூழ்கி மாணவர் மறைவு .

Image
கல்முனையை அடுத்துள்ள பாண்டிருப்புக் கடலில் மூழ்கி மாணவர் ஒருவன் ஞாயிறு காலை காணாமல் போயுள்ளார். இவரது சடலத்தைக் கண்டுபிடிக்க சுழியோடிகள் நேற்றுக் காலையிலிருந்து தேடுதலில் ஈடுபட்ட வண்ணமிருந்தனர். மூன்று நண்பர்களுடன் இவர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோதே இவரை அலை இழுத்துச் சென்றதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றது. பாண்டிருப்பைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ வைத்திய அதிகாரி டொக்டர் திருமதி குமுதினி துரைரட்ணத்தின் ஏக புதல்வன் அனோஜன் (வயது 17) என்பவரே கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளார். நேற்று தனது நண்பர்களுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றவேளையில் இத்துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. எஞ்சிய மூவரும் வந்து தகவலைத் தெரிவித்துள்ளனர். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி உயர்வகுப்பு மாணவனான அனோஜனுக்கு ஒரேயொரு சகோதரி (வைத்தியபீடம்) உள்ளார். தந்தையார் பற்றிமாக்கல்லூரியின் இரசாயனவியல் உயர்தர ஆசிரியராவார்.

கல்முனை வாகன விபத்தில் ஒரு இளைஞன் மரணம் , மூவர் காயம்!

Image
அம்பாறை மாவட்டம் கல்முனையில் நோன்பு பெருநாள் தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். அதிகாலை ஒரு மணியளவில் கல்முனைக்குடி, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகாமை யில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று தெரிய வருகின்றது . மாளிகைக்காட்டிலிருந்து கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் வீதி ஓரத்திலிருந்த மின் கம்பத்தில் மோதியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளார் . மாளிகைக்காட்டைச் சேர்ந்த ஏ.எம். ஹனீபா நியாஸ் வயது 18 என்பவரே கொல்லப்பட்டவராவார். காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நான்கு இளைஞர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு

Image
ஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு நாளை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது , 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரியபள்ளி வாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.

பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார்.

Image
பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண்  தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார். இந்தக் கன்றுக்கும் மனிதக் குழந்தைக்கும் எதுவித வேறுபாடுகளும் இல்லையென அவர் கூறுகிறார். இந்திய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவுதி பாய் என்னும் பெண்ணே இவ்வாறு கன்றுக்கு பாலூட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், ‘இந்தக் கன்று பிறந்தவுடன் அதனது தாயை பறிகொடுத்தது. அதுநாள் முதல்  இந்தக் கன்றை நானே எனது கைகளால் தூக்கி வளர்க்கின்றேன். அந்தப் பசுக்கன்றுக்கு இயற்கை முறையில் நான் பாலூட்டி வருகின்றேன். தாய்ப் பசு இறக்கும்போது அந்த இளம் கன்றை நான் கண்டேன். குழந்தைக்கும் அந்தக் கன்றுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. சில நேரங்களில் சப்பாத்தி போன்ற உணவுகளை உண்பதற்கு வழங்குவோம். அதனோடு மிகவும் மெதுவாக தண்ணீரை குடிப்பற்கு வழங்குவோம். இந்த விரதத்திலிருந்து அந்தக் கன்று வளர்ச்சியடையத் தொடங்கியது. கடவுள் அருளினால் இந்தக் கன்றை என்னால் வளர்க்க முடிகிறது’ என்று தெரிவித்துள்ளார். அந்த கிராமத்திலிலுள்ள மற்றுமொருவர் கூறுகையில், ‘இந்தச் ...

வேலையற்ற இளைஞர்களுக்கான சாரதிப் பயிற்சி நெறி முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

Image
. கிழக்கு மாகாணத்தில் வேலையற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறிக்கான  அனுமதிபத்திரங்களை வழங்கிவைத்தார். குச்சவெளி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.கௌரீஸ்வரன்  தலைமையில் இடம்பெற்றது. முதலமைச்சரின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் இப் பயிற்சி நெறியினை முடித்து வெளியேறுகின்ற இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்புக்கலும்   பெற்றுக் கொடுக்கப்படும்.  பயிற்சி நெறியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் வி. கௌரிதரன் நெறிப்படுத்தி வருகின்றார்.

அம்பாறை திருக்கோயிலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி

Image
அம்பாறை திருக்கோவில் விநாயகபுர முகத்துவாரப் பிரதேசத்தில் விஷம் அருந்தி மயக்கமடைந்த நிலையிலிருந்த காதல் ஜோடியை திருக்கோவில் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்த காதல் ஜோடி நேற்று மாலை விஷம் அருதியதாக திருக்கோவில் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.ரணதுங்க தெரிவித்தார். விநாயகபுரம் முகத்துவார தென்னம் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி மயக்கமடைந்த நிலையில் இருந்த இந்த ஜோடிகள் தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த ஜோடிகள் அக்கரைப்பற்று சாகாம வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்!

Image
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைமுனை பள்ளிவாசல் அருகில் வைத்து இன்று மாலை 4.30 மணி அளவில் தனியார் பஸ் ஒன்றில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளான இவர்கள் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு இத்தனியார் பஸ்ஸில் சிறைச்சாலைக்கு திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே தப்பி விட்டார்கள். அட்டாளைச்சேனையை சேர்ந்த ஆதம்பாவை ஜஷிர், இமாதீன் அன்வர் ஆகியோரே இவ்வாறு தப்பிச் சென்று இருப்பவர்கள் ஆவர். இவர்கள் தப்பிச் சென்ற வேளையில் கைவிலங்குகள் இடப்பட்டிருக்கவில்லை. அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர்களை தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் எதிர்க்கட்சியிலேயே நீடிப்போம்: ஹக்கீம்

Image
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும் எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் நீடிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதி உயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.