சிறைச்சாலைக் கைதிகள் இருவர் தப்பி ஓட்டம்!
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைமுனை பள்ளிவாசல் அருகில் வைத்து இன்று மாலை
4.30 மணி அளவில் தனியார் பஸ் ஒன்றில் இருந்து இரு கைதிகள் தப்பிச்
சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளான இவர்கள்
அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு இத்தனியார்
பஸ்ஸில் சிறைச்சாலைக்கு திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோதே
தப்பி விட்டார்கள்.
அட்டாளைச்சேனையை சேர்ந்த ஆதம்பாவை ஜஷிர்,
இமாதீன் அன்வர் ஆகியோரே இவ்வாறு தப்பிச் சென்று இருப்பவர்கள் ஆவர்.
இவர்கள் தப்பிச் சென்ற வேளையில் கைவிலங்குகள் இடப்பட்டிருக்கவில்லை.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொலிஸார் இவர்களை தீவிரமாக தேடி
வருகின்றார்கள்.
Comments
Post a Comment