அம்பாறை திருக்கோயிலில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
விநாயகபுரம் முகத்துவார தென்னம் தோட்டப் பகுதியில் விஷம் அருந்தி மயக்கமடைந்த நிலையில் இருந்த இந்த ஜோடிகள் தொடர்பில் பொது மக்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்த ஜோடிகள் அக்கரைப்பற்று சாகாம வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment