வேலையற்ற இளைஞர்களுக்கான சாரதிப் பயிற்சி நெறி முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் வேலையற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று முதற்கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சுமார் 30 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி நெறிக்கான அனுமதிபத்திரங்களை வழங்கிவைத்தார்.
குச்சவெளி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.கௌரீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
முதலமைச்சரின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் இப் பயிற்சி நெறியினை முடித்து வெளியேறுகின்ற இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்புக்கலும் பெற்றுக் கொடுக்கப்படும். பயிற்சி நெறியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் வி. கௌரிதரன் நெறிப்படுத்தி வருகின்றார்.
Comments
Post a Comment