அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தாலும் எதிர்க்கட்சியிலேயே நீடிப்போம்: ஹக்கீம்
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும் எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். |
எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கட்சியில்
அங்கம் வகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் நீடிக்க உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதி உயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். |
Comments
Post a Comment