Posts

மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே

Image
அமைச்சர் ரிசாத்  கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சபையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் 11 வருட காலம் அபிவிருத்தியின்றி காணப்படும் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தியினை எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி முதல் எமது கட்சி பொறுப்பெடுக்கும் என பிரகடனம் செய்தார். கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடி முற்சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மாநகர சபை வேட்பாளர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:- இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியினை மாற்றி எழுதிய பெருந் தலைவர் மர்ஹ¥ம் அஷ்ரப் பிறந்த இந்த மண்ணான கல்முனை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக பூமியினை தற்போது பார்க்க

மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் நினைவு தினம்

Image
cs;Suhl;rp khfhz rigfs; mikr;ru;  A.L.M. mjhTy;yhtpd; jiyikapyhd Njrpa fhq;fpu]; Vw;ghl;by; New;W nts;spf;fpoik ku;`Pk;  M.H.M. m\;ug; epidT jpdKk; Fu;Md; jkhk; itgtKk; ew;gpl;bKidapy; eilngw;wJ. fy;Kid khefu rigf;fhd Ntl;ghsu;  A.G.M. nesrhj; jiyikapy; ,lk;ngw;w itgtj;jpy;  Mapuj;Jf;Fk;Nkw;gl;ltu;fs; fye;Jnfhz;ldu;. ku;`Pk; m\;ug;  vkf;F fhl;ba topiambnahw;wp Njrpafhq;fpu]; gazpf;fpwJ mjdhy;  ve;jnthU tplaj;jpYk; ehk; Njhw;Wg;Nghdjpy;iy Njrpa fhq;fpu]; jiytu; m\;ug;gpd; epidT epfo;Tfis , tUle;NjhWk; jpl;lkpl;L rpwg;ghf nra;J tUfpd;wJ.  vd mq;F ciuahw;wpa mikr;ru; mjhTy;yh njuptpj;jhu;.  ,e;epfo;tpy; fpof;F khfhz mikr;ru;  M.S. cJkhnyg;ig khfhzrig cWg;gpdu;                      M.L. Jy;fu; eaPk; cl;gl ew;gpl;bKid Njrpa fhq;fpu]; kj;jpa FO mq;fj;jtu;fs; kf;fs; vd gyUk; fye;J nfhz;ldu;

கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு விழா

Image
கல்முனை அன்னை வேளாங்கண்ணி ஆலய 32 வது வருடாந்த திரு  விழா இன்று ஞாயிறு காலை சிறப்பாக நடை பெற்று முடிந்தது. கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான  வருடாந்த விழா  நான்காம் நாளான இன்று  காலை கூட்டு திருப்பலியுடன்  நிறைவடைந்தது. குருத்துவத்தில் வெள்ளிவிழா காணும் அருட்தந்தை இமானுவல் தலைமையில்  இடம்பெற்ற ஆலய இவ்விழாவில்  நற்சிந்தனை  கூட்டுப் பிரார்த்தனை என்பன இடம் பெற்று கூட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப் பட்டது. கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்கு தந்தை ஜோன் அடிகளார் உட்பட கல்முனை கார்மேல் அன்னையர் மட அருட் சகோதரர்கள்,அருட் சகோதரிகள் உட்பட கல்முனை பிர தேசத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் இன்று இடம் பெற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

குறுந்தகவல் பிரச்சாரம் ஒக்டோபர் 5ம் திகதியுடன் நிறைவு

Image
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு  குறுந்தகவல்கள் (sms) மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பிரச்சார  நடவடிக்கைகளும் ஒக்டோபர் 5ம் திகதி முகதி முதல் தடை செய்யப்பட வேண்டும்  என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.  மேலும் முந்தைய தேர்தல் வேட்பாளர்கள் சில பிரச்சார காலம் நிறைவடைந்ததின்  பின்னர் கூட குறுந்தகவல்கள் மூலம் பிரச்சாரங்களை மேற்கொண்டமையை  தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.  இதேவேளை, பிரச்சார தடைக் காலங்களில் இலத்திரனியல் மற்றும்  அச்சூடகங்களின் ஊடன பிரச்சார நடவடிக்கைகளை தடை செய்வதற்கான வழிவகைள்  குறித்து தேர்தல் செயலகம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில், இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை  நடத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 

நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதி நிர்மாணம்

Image
ஜப்பானின் ஜெயிக்காத்திட்டத்தின் நிதியொதுக்கிட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி. நீர்ப்பாசனம். வீடமைப்பும் நிர்மாணம் . கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் 69   மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள நற்பிட்டிமுனை பாண்டிருப்பு வீதிக்கான அங்குராப்பண நிகழ்வு  வெள்ளிகிழமை காலை  இடம்பெற்றது. இவ்வீதிக்கான நினைவுப்படிகத்தினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சா ஏ.எல்.எம்.அதாவுல்லாவும் திட்டவரைபடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினா் எம்.எல்.ஏ.துல்சான்  மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தியமைச்சா் எம்.எஸ். உதுமாலெவ்வை ,கல்முனை மாநகர சபை வேட்பாளர்.ஏ.ஜி.நௌசாத் ஆகியோர் திரை நீக்கம் செய்து வைத்தனா.

பொலிஸ் அதிகாரிகள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப்பலி!

Image
அம்பாறையில் மஹாஓயா 65ஆம் சந்தியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரிகள்  இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி  ஒருவர் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைதானே சுட்டுக்கொண்ட சம்பவத்திலேயே இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயங்களுடன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனக்கு கடமைப் பட்டுள்ளது

Image
வேட்பாளர் ஹலீம்  நான் வெளி நாட்டில் தொழிலுக்காக சென்று அங்கு வசித்த போது அங்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக அரிய பங்காற்றி இருக்கின்றேன் . எனக்கு கட்சி கடமைப் பட்டுள்ளது.  என்னை அரசியலுக்குள் நேரடியாக கொண்டுவந்து இந்த பிர தேசத்தின் அபிவிருத்யில் அக்கறை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் தான் இன்று கல்முனை மாநகர சபைக்கு நான் வேட்பாளனாக நிறுத்தப் பட்டுள்ளேன்  . இவ்வாறு கல்முனை மாநகர சபைக்கு 25ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஹலீம் எஸ்.முகம்மத் ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.

மக்களின் தேவைகளுக்காக பிரதிநிதிகள் அரசுடன் இருக்க வேண்டும்

Image
கடந்த பல வருடங்களாக கிடைக்கப்பெறாத பாரிய அபிவிருத்திகளை  கல்முனை மாநகருக்கு கொண்டு வந்து தரும் இத்தேர்தலை மக்கள்  தமது வாக்குகள் மூலம் எடுத்துக் காட்ட வேண்டும் என வேண்டுகோள்  விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்  கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்  இன்னும் 6 வருடங்களுக்க ஆட்சியில் இருக்கப்போகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை ஆதரிப்பதன் மூலம் எமது சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.  சாய்ந்தமருது சுனாமி வீடமைபட்பு பயனாளிகளினால் ஒழுங்கு  செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்று சாய்ந்தமருது பொலிவேரியன்  கூட்டுறவு மண்ட கட்டிடத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு  கூறினார்.  அமைப்பின் தலைவர் ஏ.பீ.அப்துர் ரஹ்மான் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில் கூறியதாவது –  எமது மக்களது தேவைகள் அதிகமாக இருக்கின்றது.அதனை ஆட்சியாளர்களிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு எமது  பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும். எதிர்கட்சியில்

கல்முனையில் கடற்கரை மின்னொளி உதைபந்தாட்டம்

Image
கல்முனை வின்ஸ்டார் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த கடற்கரை மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கல்முனை றோயல் சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி கடற்கரை உதைபந்தாட்ட போட்டியில் 8 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் கல்முனை றோயல் சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகமும் கல்முனை ஹிட்ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இறுதி வரை இரண்டு கழகங்களும் தலா 1 கோலை போட்டதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய நடுவர்தண்டனை உதை மூலம் வெற்றியினை தீர்மானிக்க தீர்ப்பு வழங்கினார். இதனடிப்படையில் இரண்டு கழகங்களுக்கும் தலா 5 சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் 2-1 என்ற கோல் அடிப்படையில் கல்முனை றோயல் சலஞ்சர்ஸ் விளைளயாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டி நிகழ்சிக்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மா

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமதி

Image
ஆட்பதிவு திணைக்களம் விசேட சுற்று நிருபம் முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. முஸ்லிம் பெண்கள் ‘பர்தா’ அணிந்த நிலையில் அடையாள அட்டைக்காக படம்பிடிக்க முடியும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜகத் பீ விஜேவீர அறிவித்துள்ளார். முஸ்லிம்கள் தலையை மூடிய நிலையில், அடையாள அட்டை பெற புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் இதற்கு முன் அனுமதி மறுத்திருந்தது. தலைமுடி தெரியும் நிலை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், முஸ்லிம் தலைவர்கள், அரசியல் வாதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். முஸ்லிம்களின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் தொப்பியை அணிந்த நிலையில் அடையாள அட்டை பெற அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உலமா சபை பிரதிநிதிகள் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் அமைப்புகள் போன்றோர் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்து முஸ்லிம்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத

அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 27 மாணவர்கள் சித்தி

Image
அண்மையில் வெளியிடப்பட்ட 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்தைச் சேர்ந்த சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலிருந்து 27 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஐ.இன்பாஸ் அஹமட் (179) , எம்.எஸ்.எம்.சம்ரி (175) , என்.எப்.ஸஸ்னா (174) , எம்.எச்.எம்.ஆர்.சனார் (174) , எம்.பி.எம். இப்ஹாம் ஆகில் (174) , ஏ.எஸ்.எம்.சஹாமத் ( 173) , ஏ.எப். ஸஹ்னாஸ் ( 168) , எம்.எம்.யஹ்யா அஹுகாம் (168) , ஏ.டபிள்யு .குல்னாஸ் பேகம் (167) , ஏ.எப்.என். அப்னா ( 167) , எம்.எம்.இஸட். மிஸ்ரி (166) , எம்.எஸ்.அமானி ( 165 ) , எம்.எஸ்.எம். அம்ரி ( 164) , எம்.எச்.எம். சாதிர் ஆகில் ( 163) , எம்.எம்.இஜாசுல் அப்தாப் ( 163) , இஸட் .டபிள்யு. எம். சஜீத் ( 162) , எப். எச்.எப். நிப்ஸாத் றிஹானி ( 161) , ஏ.எம்.ஹஸ்னான் ( 160) , எம்.என்.நுஸைர் (157) , எஸ்.எப். சபகா சகா ( 157) , ஏ.எம்.எம்.ஜய்னூஸ் ( 156) , எம்.எச்.எம். ஹஸ்னான் (154) , ஐ.எஸ்.ஹவ்ஸார் (154) , எம்.எம்.எம். சாஜித் (154) ,  எம்.எஸ்.ஆசிப் அஹமட் ( 154) , எம்.எம்.இஸட். சுஸானி ( 153) , எம்.எஸ்.றுஸனி அஹமட் ( 152) ஆகிய மாணவர்களே சித்த

இரத்தின தீபம் விருது விழா; 48 பேருக்கு கௌரவம்

Image
மலையக கலை, கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்தின தீபம் தேசிய விருது வழங்கும் விழா கல்முனை பாத்திமா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இரத்தினபுரி மேலதிக மாவட்ட நீதிபதி எம்.எம்.பரிக் தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த 48 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்தியாவைச் சோ்ந்த உலக ஆச்சாரியார் இன்றுகல்முனையில் தற்கொலை செய்து கொண்டார்.

Image
ஆலயங்களுக்கெள்ளாம் சிற்பங்களை செதுக்கும் இந்திய நாட்டைச் சோ்ந்த சிறந்த சிற்பியான உலக ஆச்சாரியர் திரு உ.கருப்பையா ( வயது 58 ) என்பவா் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தரவைசித்தி விநாயகா ஆலயத்திற்கு பின்னாலுள்ள பல்தேவைக்கட்டிடத்தில் இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இவா் மேற்கூறப்பட்ட கட்டிடத் தில் இருந்த கொண்டு சிற்பங்களைச் செய்வதற்காகச் செல்வது வழமையான ஒரு நிகழ்வாகும்... இதேபோல் இன்று  காலையில் சிற்பங்களைச் செய்வதற்கான கலவையை இடுமாறு தனது பணியாளரிம் கூறிவிட்டு கதவை மூடிக்கொண்டவா் மிக  நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து பணியாளா கதவை திறந்த வேளையில் மின்விசிறியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இது தொடா்பான மேலதிக விசாரனைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனா். 

வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்

Image
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் (20) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.  அதன்படி நாளை தொடக்கம் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு.பி.சுமணசிறி தெரிவித்தார்.  இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் அன்றைய தினமும் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் மாதம் 1ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.  முதலாம் திகதிக்குள் வாக்காள் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் மற்றும் உப தபால் நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும். 

முதன்மை வேட்பாளர் நிசாம் காரியப்பரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

Image
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். தனது கல்முனை இல்லத்தில் விஷேடமாக கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார். இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எஸ். பி. மஜீத்,  கே. எம். ஏ. ரஸாக்,  ஏ. எம். ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருடன் வேட்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நிந்தவூர் முஹமட் ஆதிப் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

Image
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் முஹமட் ஆதிப் இம்முறை தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலத்தில் இவர் 4ம் இடத்தை பெற்றுள்ளார். முஹமட் ஆதிப் நிந்தவூர் 24ம் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரான பி.ரி.அப்துர் றஹீம்- ஏ. ஹம்சா ஆகியோரின் புதல்வராவார். அத்துடன் இவர் நிந்தவூர் தைபா  பௌண்டேசன் தவிசாளர் PTA ஹசன் அவர்களது சகோதரரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  முஹமட் ஆதிப் தனது சாதனை பற்றி எமது கல்முனை நியூஸ் செய்தி சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது; அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெறுவதே எனது இலக்காக இருந்தது..அதனை மையமாக வைத்தே எனது முயற்சியைத் தொடர்ந்தேன். நான் பிரத்தியேக வகுப்புகள் எவற்றுக்கும் செல்லாமல் ஆயிரக்கணக்கான மாதிரி வினாக்களை தொடர்சசியாக பயிற்சி செய்து வந்தேன். எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் எனது தந்தையிடமும் வகுப்பாசிரியரிடமும் விளக்கம் பெற்று அதனைத் தீர்த்துக்கொண்டேன். பல சந்தர்பங்களில்

உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிப்பது எப்படி கபே விளக்கம்

Image

சாய்ந்தமருது மாணவன் சாதனை

Image
கமு /சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாட சாலை ஜி.எம்.எம்.எஸ்  மாணவன் முகம்மத் மன்சூர் அகமத் சிபாத் அப்ரீன் ஐந்தாம் தர புலமை பரீட்சையில் 184  புள்ளிகளை  பெற்று சாய்ந்தமரு கோட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார். 

எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தின நிகழ்வு

Image
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11ஆவது ஆண்டு நினைவு தின பல்வேறு நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் அவரது காரியாலயத்தில் கத்தமுல் குர்ஆன் ஓதலும் உணவு வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.  இதே வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முதன்மை வேட்பாளருமான நிசாம் காரியப்பரின் தலைமையில் அதே நிகழ்வுகளுடன் சுனாமியினால் பாதிக்கப்பட்டு தற்போது நிரந்தர வீட்டுத்திட்டத்தில் வாழும் பல குடும்பங்களுக்கு தானம் வாழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இத்தினத்தையொட்டி இன்று மாலை கல்முனை பிரதான வீதியில் தலைவரின் இல்லத்திற்கு முன் நிசாம் காரியப்பரின் தலைமையில் தலைவரின் ஞாபகார்த்த உரைக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. நிசாம் காரியப்பர் எம்.எச்.எம்.அஷ்ரபின் குடும்ப உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனை அல்- அஸ்கர் வித்தியாலயத்தில் வரலாற்று சாதனை

Image
fy;Kid my;-m];`h; tpj;jpahyaj;jpd; tuyhw;wpy; Kjy; jlitahf  rhjid gilj;jth;fSf;F ,d;W nts;spf;fpoik ghlrhiy r%fk; ghuhl;L. 5Mk; Mz;L Gyik ghprpy; ghpl;irapy; Nkw;gbg;ghlrhiyapd; tuyhw;wpy; Kjy; jlitajf 10 khzth;fs; rpj;jpaile;Js;sdh;. rpj;jpaile;j khzth;fisAk; mg;ghlrhiyapd; mjpgh; V.vy;.mg;Jy; w]hf; gpujpajpgh; vk;.I.vk;.k]{j; gFjpj;jiyth; vk;.I.vk;.rk;Rj;jPd; nghWg;ghrphpah; Mrphpah; V.Mh;.v];.m]Pdh kw;Wk; ghl Mrphpah;fshd vk;.I.`hhpjh. vk;.wp]hah MfpNahiu ghlrhiyr;r%fg; ghuhl;b nfsutpj;jdh;. fle;jfhyq;fis tpl ,g;ghlrhiyapd; fy;tp epiy tsh;r;rpaile;J tUfpd;wik Fwpg;gplj;jf;fjhFk;.

புலமை பரீட்சை வெட்டுப் புள்ளி

Image

வாழ்த்துக்கள்

Image
ஐந்தாம் தர புலமை பரீட்சையில்  நட்பிட்டிமுனையை  சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 190  புள்ளிகள் பெற்று அம்பாறை மாவட்டத்தி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலையை சேர்ந்த இம்மாணவன் நற்பிட்டிமுனை அப்துல் சதார்  நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.                                                               ஹிமாயுன் சிம்ஹார் இவருக்கு கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது 

நற்பிட்டிமுனையில் மின்னொளி கிரிக்கட் சுற்றுப் போட்டி

Image
நற்பிட்டிமுனை ஒக்ஸ்பேர்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முன்று தினங்களாக நடைபெற்ற மெகா நைற் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இப்போட்டியில் திருக்கோயில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. இரண்டாம் இடத்தை கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இக்கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ௩௩ விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்டன. ஒக்ஸ்பேர்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வீ.எம்.மக்பூல் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸ்ஸாக்(ஜவாத்), ஓய்வுபெற்ற அதிபரும், முன்னாள் கல்முனை பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ஏ.கபூர், நற்பிட்டிமுனை எம்.ஆர்.சி.நிறுவன உரிமையாளர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன், கல்முனை மாநகரசபை வேட்பாளர் எஸ்.எச்.எம். நபார் உட்பட நற்பிட்டிமுனையிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், கழகத்தின் கட்டுப்பாட்டுச் சப

கல்முனை மாநகர சபை நூலகங்களுக்கு புத்தக விநியோகம்

Image
கடந்த ஐந்து வருடங்களுக்கு பிறகு கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள கல்முனை,நற்பிட்டிமுனை,மருதமுனை,சாய்ந்தமருது ஆகிய நூலகங்களுக்கு  5500000  ரூப பெறுமதியான நூல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. கல்முனை மாநகர சபை விசேட ஆணையாளர் எம்.எம்.நௌபல் தலைமயில்  இடம்  பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர கணக்காளர் எம்.டி .சாலிதீன் ,நிருவாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் , ஆசியா மன்ற திட்டமிடல் அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கல்முனை வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள்,நூலக அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அரசியல் தலையீட்டைக் கண்டித்து டாக்டர்கள் ஆர்பாட்டம்

Image
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை நிருவாகத்தில் அரசியல் தலையீடு இடம்பெற்று வருவதைக் கண்டித்து வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது. இதில் அவ்வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களும் தாதியர்களும் ஏனைய ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதேவேளை இவ்வைத்தியசாலை வைத்தியர்களால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஒரு சிலரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாட்டையடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்றும் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.