குறுந்தகவல் பிரச்சாரம் ஒக்டோபர் 5ம் திகதியுடன் நிறைவு
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு
குறுந்தகவல்கள் (sms) மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பிரச்சார
நடவடிக்கைகளும் ஒக்டோபர் 5ம் திகதி முகதி முதல் தடை செய்யப்பட வேண்டும்
என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
மேலும் முந்தைய தேர்தல் வேட்பாளர்கள் சில பிரச்சார காலம் நிறைவடைந்ததின்
பின்னர் கூட குறுந்தகவல்கள் மூலம் பிரச்சாரங்களை மேற்கொண்டமையை
தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பிரச்சார தடைக் காலங்களில் இலத்திரனியல் மற்றும்
அச்சூடகங்களின் ஊடன பிரச்சார நடவடிக்கைகளை தடை செய்வதற்கான வழிவகைள்
குறித்து தேர்தல் செயலகம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை
நடத்தவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment