நற்பிட்டிமுனையில் மின்னொளி கிரிக்கட் சுற்றுப் போட்டி
நற்பிட்டிமுனை ஒக்ஸ்பேர்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முன்று தினங்களாக நடைபெற்ற மெகா நைற் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.
இப்போட்டியில் திருக்கோயில் உதயசூரியன் விளையாட்டுக் கழகம் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டது. இரண்டாம் இடத்தை கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.
நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இக்கிரிக்கட் சுற்றுப் போட்டியில் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள ௩௩ விளையாட்டுக் கழகங்கள் பங்குகொண்டன. ஒக்ஸ்பேர்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் வீ.எம்.மக்பூல் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.றஸ்ஸாக்(ஜவாத்), ஓய்வுபெற்ற அதிபரும், முன்னாள் கல்முனை பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ஏ.கபூர், நற்பிட்டிமுனை எம்.ஆர்.சி.நிறுவன உரிமையாளர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன், கல்முனை மாநகரசபை வேட்பாளர் எஸ்.எச்.எம். நபார் உட்பட நற்பிட்டிமுனையிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், கழகத்தின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் என பலரும் அதிதிகளாக கலந்துகொண்டு வெற்றியீட்டிய கழகங்களுக்கான வெற்றிக் கேடயம் மற்றும் பணப் பரிசுகளை வழங்கி வைத்தனர்.
Comments
Post a Comment