எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தின நிகழ்வு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11ஆவது ஆண்டு நினைவு தின பல்வேறு நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் அவரது காரியாலயத்தில் கத்தமுல் குர்ஆன் ஓதலும் உணவு வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. 


இதே வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முதன்மை வேட்பாளருமான நிசாம் காரியப்பரின் தலைமையில் அதே நிகழ்வுகளுடன் சுனாமியினால் பாதிக்கப்பட்டு தற்போது நிரந்தர வீட்டுத்திட்டத்தில் வாழும் பல குடும்பங்களுக்கு தானம் வாழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இத்தினத்தையொட்டி இன்று மாலை கல்முனை பிரதான வீதியில் தலைவரின் இல்லத்திற்கு முன் நிசாம் காரியப்பரின் தலைமையில் தலைவரின் ஞாபகார்த்த உரைக் கூட்டமும் இடம்பெறவுள்ளது. நிசாம் காரியப்பர் எம்.எச்.எம்.அஷ்ரபின் குடும்ப உறவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!