மக்களின் தேவைகளுக்காக பிரதிநிதிகள் அரசுடன் இருக்க வேண்டும்


கடந்த பல வருடங்களாக கிடைக்கப்பெறாத பாரிய அபிவிருத்திகளை 
கல்முனை மாநகருக்கு கொண்டு வந்து தரும் இத்தேர்தலை மக்கள்
 தமது வாக்குகள் மூலம் எடுத்துக் காட்ட வேண்டும் என வேண்டுகோள் 
விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் 
கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன்
 இன்னும் 6 வருடங்களுக்க ஆட்சியில் இருக்கப்போகும் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை ஆதரிப்பதன் மூலம் எமது சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கூறினார். 

சாய்ந்தமருது சுனாமி வீடமைபட்பு பயனாளிகளினால் ஒழுங்கு
 செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்று சாய்ந்தமருது பொலிவேரியன் 
கூட்டுறவு மண்ட கட்டிடத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு
 கூறினார். 

அமைப்பின் தலைவர் ஏ.பீ.அப்துர் ரஹ்மான் தலைமையில் இடம் பெற்ற
கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில்
கூறியதாவது – 

எமது மக்களது தேவைகள் அதிகமாக இருக்கின்றது.அதனை
ஆட்சியாளர்களிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கு எமது
 பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும். எதிர்கட்சியில்
 இருந்து கொண்டு அதனை பெற்றுக் கொள்ள முடியாது. 

கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதனைதான்
 செய்தது. தீர்மாணிக்கும் சக்தியாக இக்கட்சியினை மாபெரும்
 தலைவர் அஷ்ரப் வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதன்
 பிறகு தலைமைக்கு வந்தவர்கள் மக்களதும், கட்சியினதும்
 நலனுக்கும் அப்பால் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அதனை பயன்படுத்தினர். 

அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அக்கட்சிகளை நம்பி வாழ்ந்த
 மக்களே. இன்று இதே நிலை தான் கல்முனை நகருக்கும் ஏற்பட்டுள்ளது.
 இவ்வாறான தீர்க்கமான நேரத்தில் புத்திசாது ரியமான முடிவுகளை எடுக்க
 வேண்டும்.தனித்து நின்று எம்மால் எதனையும் சாதிக்க முடியாது
.நாம் ஒன்றுபட்டு அதனை வெற்றிக் கொள்ள வேண்டும். 

கட்சிகள் என்பது மதமல்ல அது மக்களின் உரிமைகளை தேவைகளைப் 
பெற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் செயற்பாடு 
உரிய முறையில் இல்லையெனில் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா
 என கேள்வி எழுப்பிய அமைச்சர், இன்று வடக்கிலும், தெற்கிலும் பெய்து
 வரும் அபிவிருத்தி மழையை ஏன் கல்முனைக்கு கொண்டுவரக் கூடாது, 
அதற்கான அங்கீகாரத்த்தை இப்பிரதேச மக்கள் தருவதற்கு ன்வந்த போபதும், 
சில சுயலாபம் கொண்டவர்கள்,இங்கு அபிவிருத்தி வந்துவிட்டால், தமக்கு 
மதிப்பிருக்காது என்ற குறுகிய சிந்தனையால்,அதனை தடுத்து மக்களை
 அரச விரோத சக்திகளாக காட்ட செயற்படுவது வேதனையளிக்கின்றது. 

படித்த இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, புதிய நகர நிர்மாணம், 
குடிநீர் வசதி, கல்வி சார் அபிவிருத்திகள் உள்ளிட்ட இன்னோரன்ன
 எத்தனையே அபிவிருத்தி திட்டங்கள் கல்முனைக்கு தேவை.
 அதனை அடைந்து கொள்ள நடை பெறப்போகும் உள்ளுராட்சி 
மன்றத் தேர்தலில் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 
வெற்றி பெறுவது காலத்தின் தேவையாகும் என்றும் 
அமைச்சர் றிசாத் பதீயுதீன் சுட்டிக்காட்டினார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்