அரசியல் தலையீட்டைக் கண்டித்து டாக்டர்கள் ஆர்பாட்டம்
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை நிருவாகத்தில் அரசியல் தலையீடு இடம்பெற்று வருவதைக் கண்டித்து வைத்தியர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெற்றது. இதில் அவ்வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களும் தாதியர்களும் ஏனைய ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இவ்வைத்தியசாலை வைத்தியர்களால் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஒரு சிலரால் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாட்டையடுத்து அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்றும் இன்று வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment