முதன்மை வேட்பாளர் நிசாம் காரியப்பரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் அக்கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். தனது கல்முனை இல்லத்தில் விஷேடமாக கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் தனது விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றினார்.
இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எஸ். எஸ். பி. மஜீத், கே. எம். ஏ. ரஸாக், ஏ. எம். ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக
பொதுச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் ஆகியோருடன் வேட்பாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment