வாக்காளர் அட்டை விநியோகம் நாளை ஆரம்பம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் (20) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை தொடக்கம் வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு.பி.சுமணசிறி தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் அன்றைய தினமும் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் 1ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
முதலாம் திகதிக்குள் வாக்காள் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் அருகிலுள்ள தபால் மற்றும் உப தபால் நிலையங்களுக்குச் சென்று தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Comments
Post a Comment