தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நிந்தவூர் முஹமட் ஆதிப் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன் முஹமட் ஆதிப் இம்முறை தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலாமிடம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலத்தில் இவர் 4ம் இடத்தை பெற்றுள்ளார். முஹமட் ஆதிப் நிந்தவூர் 24ம் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியரான பி.ரி.அப்துர் றஹீம்- ஏ. ஹம்சா ஆகியோரின் புதல்வராவார். அத்துடன் இவர் நிந்தவூர் தைபா  பௌண்டேசன் தவிசாளர் PTA ஹசன் அவர்களது சகோதரரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. 
முஹமட் ஆதிப் தனது சாதனை பற்றி எமது கல்முனை நியூஸ் செய்தி சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கூறியதாவது; அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெறுவதே எனது இலக்காக இருந்தது..அதனை மையமாக வைத்தே எனது முயற்சியைத் தொடர்ந்தேன். நான் பிரத்தியேக வகுப்புகள் எவற்றுக்கும் செல்லாமல் ஆயிரக்கணக்கான மாதிரி வினாக்களை தொடர்சசியாக பயிற்சி செய்து வந்தேன். எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் எனது தந்தையிடமும் வகுப்பாசிரியரிடமும் விளக்கம் பெற்று அதனைத் தீர்த்துக்கொண்டேன்.


பல சந்தர்பங்களில் வாசிகசாலைக்குச் சென்று அங்குள்ள புத்தகங்களைப் பெற்று எனது சந்தேகங்களைத் தீர்த்திருக்கின்றேன். என்னுடைய சிறந்த பெறுபேற்றினை எதிர்பார்த்திருந்த எனது பெற்றோருடைய அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எனது நோக்கமும் விடாமுயற்சியும் ஆழ்ந்த இறை நம்பிக்கையுமே இவ்வெற்றிக்கு காரணமாகும்.


எனது இவ்வெற்றியைப் பெற்றுத்தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது வகுப்பாசிரியருக்கும் அதிபர்களுக்கும் மற்றும் சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்