மு. கா வின் ஸ்தாபகப் பூமியில்அபிவிருத்தி நடைபெறவில்லையே

அமைச்சர் ரிசாத் 

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சபையைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் 11 வருட காலம் அபிவிருத்தியின்றி காணப்படும் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தியினை எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி முதல் எமது கட்சி பொறுப்பெடுக்கும் என பிரகடனம் செய்தார்.
கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனைக்குடி முற்சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மாநகர சபை வேட்பாளர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:-
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியினை மாற்றி எழுதிய பெருந் தலைவர் மர்ஹ¥ம் அஷ்ரப் பிறந்த இந்த மண்ணான கல்முனை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி கண்டிருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக பூமியினை தற்போது பார்க்கும் போது கவலை தருகின்றது. பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவினையடுத்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு வந்த தற்போதைய தலைவர் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து வாழ்கிறார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மாநகர சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் நோக்கத்தை மக்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்று தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையினால் மீண்டும் மீள்குடியேற ஆரம்பித்துள்ளனர். மக்கள் அச்சமின்றி இன்று தமது பணிகளை செய்கின்றனர். பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்த நிலையினை ஏற்படுத்தியது இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதை மறக்க முடியுமா. கடந்த அனைத்துத் தேர்தல்களிலும் இந்த அரசாங்கத்தை தோல்வியுறச் செய்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்று கங்கணத்துடன் செயற்பட்டவர்கள் தான் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸினர். தேர்தலின் பின்னர் இந்த ஜனாதிபதியுடன் ஓடோடி வந்து பதவியினைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த நாட்டில் சிறந்த தலைவர் ஜனாதிபதியே என்று கூறுகின்றார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்