இந்தியாவைச் சோ்ந்த உலக ஆச்சாரியார் இன்றுகல்முனையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலயங்களுக்கெள்ளாம் சிற்பங்களை செதுக்கும் இந்திய நாட்டைச் சோ்ந்த சிறந்த சிற்பியான உலக ஆச்சாரியர் திரு உ.கருப்பையா ( வயது 58 ) என்பவா் கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ தரவைசித்தி விநாயகா ஆலயத்திற்கு பின்னாலுள்ள பல்தேவைக்கட்டிடத்தில் இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த இவா் மேற்கூறப்பட்ட கட்டிடத் தில் இருந்த கொண்டு சிற்பங்களைச் செய்வதற்காகச் செல்வது வழமையான ஒரு நிகழ்வாகும்... இதேபோல் இன்று காலையில் சிற்பங்களைச் செய்வதற்கான கலவையை இடுமாறு தனது பணியாளரிம் கூறிவிட்டு கதவை மூடிக்கொண்டவா் மிக நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து பணியாளா கதவை திறந்த வேளையில் மின்விசிறியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார்.
இது தொடா்பான மேலதிக விசாரனைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனா்.
Comments
Post a Comment