கல்முனையில் கடற்கரை மின்னொளி உதைபந்தாட்டம்
கல்முனை வின்ஸ்டார் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த கடற்கரை மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கல்முனை றோயல் சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி கடற்கரை உதைபந்தாட்ட போட்டியில் 8 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொண்டன.
இறுதிப்போட்டியில் கல்முனை றோயல் சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகமும் கல்முனை ஹிட்ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன. இறுதி வரை இரண்டு கழகங்களும் தலா 1 கோலை போட்டதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய நடுவர்தண்டனை உதை மூலம் வெற்றியினை தீர்மானிக்க தீர்ப்பு வழங்கினார். இதனடிப்படையில் இரண்டு கழகங்களுக்கும் தலா 5 சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன. இறுதியில் 2-1 என்ற கோல் அடிப்படையில் கல்முனை றோயல் சலஞ்சர்ஸ் விளைளயாட்டுக்கழகம் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. இப்போட்டி நிகழ்சிக்கு சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ. றஸாக் மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment