Posts

பாகிஸ்தானின் விமானப் படையில் ஒரு பெண், போர் விமானி

Image
  இஸ்லாமியக் குடியரசான பாகிஸ்தான் நாட்டில் இதில் 26 வயது நிரம்பிய ஆயிஷா ஃபரூக் என்ற இளம்பெண் அனைத்துப் பயிற்சிகளையும் முடித்து பாகிஸ்தானின் விமானப் படையில் ஒரு பெண், போர் விமானியாகப் பணிபுரியும் தகுதியைப் பெற்றுள்ளார்.  பெண்கள் குறித்த கட்டுப்பாடுகள் பாகிஸ்தானில் தளர்ந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூரைச் சேர்ந்த  ஆயிஷாவிடம் தனியாக ஒரு பெண் போர் விமானத்தில் பணியாற்றும் அனுபவம் தொடர்பாக கேட்டபோது எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை என்றும் ஆண்கள் செய்யும் அனைத்து செயல்களையும் தானும் செய்வதாகவும், துல்லியமாக வெடிகுண்டுகளை வீசுவதாகவும் பதில் அளித்தார். அது மட்டுமல்லாது கடந்த வருடங்களில், மொத்தம் 19 பெண்கள் பாகிஸ்தான் விமானப் படையில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றுள்ளதுடன் இவர்களுள் 6 பேர் போர் விமானப் பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனவள அமைச்சரை 2. கீ.மீ தூரம் துரத்திச் சென்ற இரண்டு யானைகள்

Image
வனவள அமைச்சர் விஜித்த விஜயமுனி சொய்சாவையே யானைகள் இரண்டு சுமார் இரண்டு கிலோமீற்றருக்கு  துரத்திய சென்றுள்ளது. கதிர்காமம் புத்தல வீதியிலேயே இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. 18 வயதிற்கும் 22 வயதிற்கும் இடைப்பட்ட இரண்டு யானைகளே அமைச்சர் பயணித்த வாகனத்தை இவ்வாறு துரத்தியுள்ளன. அமைச்சரோ வாகனத்தை சாதாரண வேகத்தில் செலுத்துமாறு கூறிவிட்டு வாகனத்தின் இருக்கையில் ஏறி யானைகளின் செயற்பாட்டை அவதானித்துக்கொண்டுவந்தார். குறித்த பிரதேசத்தில் 25க்கும் 30 க்கும் இடைப்பட்ட யானைகள் இருக்கின்றன. அவ்விடத்திற்கு வரும் மிருகங்களுக்கு உணவுகளை வழங்கவேண்டாமென வனராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் சாப்பாடு கொடுப்பதனால் யானைகள் வீதிகளுக்கு பிரவேசிப்பதாகவும் இது மிருகங்களின் வாழ்க்கையை சீர்குலைப்பதற்கான சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு ம்ஹூம் மீராசாஹிப் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்

Image
சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு  ம்ஹூம் மீராசாஹிப்  பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்  வழங்கி உள்ளது . இந்த பெயர் வைப்பதில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும்  இன்று நடை பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில்  இதற்கான அங்கீகாரத்தை  மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர் . மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக  சாலை  அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது 

கல்முனை மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்பு; கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றம்!

Image
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாவின் வீட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைக் கண்டித்து மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கண்டன நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்தனர்.  கடந்த திங்கட்கிழமை கல்முனை மாநகரசபையின் ஆளும் தரப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாவின் வீட்டில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.  இத்தாக்குதலை கண்டித்தும், அதில் சம்மந்தப்பட்டவரை கைது செய்யக் கோரியும் எதிர்காலத்தில் அங்கத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியுமே உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.  அத்துடன், மாநகர பிரதி முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரினால் பிரேரணையும் முன்வைக்கப்பட்டு சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது. இதனைத் தொடர்ந்து மாநகர முதல்வர் சிரராஸ் மீராஸாஹிப் உட்பட அங்கத்தவர்கள் அனைவரும் கறுப்புப் ப...

பலஹத்துறைப் பள்ளிவாசல் மினி சூராவளியால் சேதம்!

Image
கம்பஹ மாவட்டத்தில் உள்ள பலகத்துறை முஸ்லிம் கிராமத்தில் நேற்று (11) செவ்வாய்க் கிழமை வீசிய மினி சூறாவளியால் பெரிய பள்ளிவாசலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  ஓடுகள் காற்றில் பறந்தன. சீலின், முன் கதவு, யன்னல் மினாரா உச்சியில் அமைந்திருந்த பிறை நட்சத்திரம் எனபவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெரியபள்ளி மையவாடியையும் கடற்பரப்பையும் பிரிக்க அமைக்கப்பட்டுள்ள தூண்களில் இரண்டு  காற்றின் அகோரத்தில் விழுந்துள்ளதோடு தேங்காய்களும் வீழ்ந்தன. ஊர் மக்கள் உடனடியாக ஒன்று சேரந்து திருத்த வேலைகளை மேற்கொண்டனர்

தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவரை தீக்குளிக்க வைக்கப்படும் காட்சி இது…!!

வெளிப்படையாகவே.. இக்காணொளியை பார்க்கின்ற போது , தீக்குளிப்பில் ஈடுபட்ட சம்மந்தப்பட்ட ‘பௌத்த பிக்கு’ முன்பாக காணப்படும் இருவர் ( டீ குடிப்பதாக பாவனை செய்து கொண்டிருக்கும் நபர்கள்) இந்த திட்டமிட்ட தீக்குளிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களாக உள்ளார்கள் என்பது வெளிப்படையானது. இந்த விடயம் ஏற்கனவே குறித்த தேரரால் அரச ஊடகம் ஒன்றின் செய்தியாளருக்கு தேரரால் தெரிவிக்கப்பட்டதாகவும்.., எனினும் குறித்த செய்தியாளர் அதனை இரகசியமாக பேணியதுடன் பௌத்த பிக்கு தமக்கு தாமே தீ மூட்டிய சம்பவத்தை முழுமையாக வீடியோ மூலம் படமாக்கினார். பின்னர், இந்த சம்பவத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஊடகவியலாளரை கைது செய்யபட்டதாக தெரிய வருகின்றது. ஆனால் இத் தற்கொலை சப்பவத்துக்கு உடந்தையாக இருந்து பௌத்த பிக்குவை தீ மூட்டியவர்களை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்பவர்களை விட தற்”கொலை”க்கு தூண்டுகின்றவர்கள் தான் மிகவும் முக்கிய குற்றவாளிகள். எனவே.., முஸ்லிம் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினர...

தமிழ் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளஅரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம்

Image
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மற்றுமொரு இணையத்தளம்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்புதிய இணையத்தளத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த  இனைய தல ஆரம்பம் தமிழ் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது  இனைய தளத்தின் முகப்பில் தமிழ் என்பதற்கு பதிலாக நமிழ்  என  அச்சிடப்பட்டுள்ளது .

உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் காத்தான்குடியில் கைச்சாத்து

Image
முதற்தடவையாக இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ள உலமாக்களுக்கான மலிக் அப்துல்லாஹ் பலக்லைக்கழக கல்லூரிக்கான ஒப்பந்தம் நேற்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில வைத்து கைச்சாத்திடப்பட்டது. இளைஞர் விவகார திறன்கள அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும மற்றும் இலங்கை ஹிறா பவுண்டேசன் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவரும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மோகன்லால், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றன்களின் தலைவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சவூதி அரேபியா மன்னரின் சார்பில் அஷ்ஷெய்க் யஹ்யா பின் அப்துல் அஸீஸ், மற்றும் ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் மசூர் மௌலானா உட்பட உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், முக்கியஸ்த்தர்கள், உலமாக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்...

நாட்டில் மீண்டும் சீரற்ற காலநிலை நிலவலாம்; மீனவர்களை விழிப்புடன் செயற்பட அறிவுறுத்தல்

Image
நாட்டின் வடமேற்குப் பகுதியில் மீண்டும் மழை பெய்வதற்கும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதற்குமான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுடன் தொடர்புடைய கடற்பரப்பும் ஆழ்கடல் பகுதியும் கொந்தளிப்புடன் காணப்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மணித்தியாலயத்திற்கு எழுபது கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் அது குறித்து விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழில்ககளில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. Bad Weather Warnings SEVERE WEATHER ADVISORY VALID FOR NEXT 2 0  HOURS ISSUED AT 2130 HOURS, 11 th  JUNE 2013. (Issued by Early Warning Centre of the Department of Meteorology) Another rain spell in the South-western parts and windy condition over Sri Lanka and neighbouring sea areas are expected. Showers will occur at times in the Western, Sabaraga...

கல்முனை பிரதேசத்தில் நீண்ட காலமாக பத்திரிகை விற்பனை முகவர் நிலையமான கல்முனை ஹனிபா ஹோட்டல் புதுப் பொலிவுடன் புது இடத்துக்கு மாற்றம் பெற்றுள்ளது. புதிய விற்பனை நிலையம் கடந்த வெள்ளிகிழமை அதிகாலை வாடிக்கையாளர்கள் ,வாசகர்கள் சூழ பத்திரிகை விற்பனை முகவர் ஏ.எம்.ஹனிபாவினால் திறந்து வைக்கப் பட்டது .

Image

உம்ராவுக்கான விஸா 14 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்!

Image
உம்ரா விசா காலாவதியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது. புனித மக்கா பெரிய பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு முன் வெளி நாட்டு உம்ரா முகவர்களுக்கு அனுப்பிய சுற்று நிருபத்தின்படி, இந்த புதிய கட்டுப்பாடு இன்றைய தினம் (திங்கட் கிழமை) அமுலுக்கு வருகிறது. “டெல்லியில் இருக்கும் சவூதி தூதரகம் எமக்கு அனுப்பிய சுற்று நிருபத்தில் ஷஹ்பான் முதலாம் திகதி முதல் உம்ரா விசா 14 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என இந்தியாவின் ஹைத்ராபாத்தில் இருக்கும் உம்ரா முகவர் நிறுவனத்தின் மொஹம்மத் அப்துல் ரஸ்ஸாக் குறிப்பிட்டார்.. உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் போதுமான காலம் அங்கே தங்கியிருக்க எதிர்பார்த்தே பயண ஏற்பாடுகளை செய்கின்றனர். எனினும் எதிர்வரும் இரு மாத காலத்தில் மக்காவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜித்தாவில் உம்ரா செயற்பாடுகளில் ஈடுபடும் பணியாளரான ரஹ்மான...

கல்முனை மாநகர சபை உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

Image
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (10) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்முனைக்குடி மத்ரசா வீதியில் அமைந்துள்ள மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ்வின் வீட்டின் மீது நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், வாசல் கதவு, சுவர் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பன சேதமடைந்துள்ளன. இத்தாக்குதலின் போது மாநகர சபை உறுப்பினர் பரக்கத்துல்லாஹ் மற்றும் அவரது குடும்பத்தினரும் வீட்டில் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த போதிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதிப்புகளை பார்வையிட்ட கல்முனைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூறாவளி ஆபத்து இல்லை!

Image
நேற்று சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் மன்னார் முதல் பொத் துவில் வரை கொழும்பு- காலி ஹம்பாந் தோட்டை ஊடாக கடற்கரையோரத்தில் வீசும் பலத்த காற்று பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும்- தற்போது இலங்கைக்கு சூறாவளி ஆபத்து எதுவும் இல்லையென்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள காலநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் இலங்கையின் தெற்மேற்கு கரையோரப் பிரதேசத்தில் ஆழ்கடலிலோ ஆழம் குறைந்த கடல் பிரதேசத்திலோ மீன்பிடி நடவடிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் ஈடுபடலாகாது என்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காலநிலை ஆரம்பித்திருப்பதனால் தான் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதாகவும் மேல்- சப்ரகமுவ- மத்திய- ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழையும் காற்றும் அடுத்த ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய மழையின்போது ஒரு சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதுடன்- காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றராக...

18 மீனவர்கள் பலி: 36பேரை காணவில்லை

Image
நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 36பேர் காணாமல் போயுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.  இவ்வாறு காணாமல் போன மீனவர்கள் களுத்துறை, காலி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை, மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற 37 மீன்பிடிப் படகுகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள மீன்பிடி அமைச்சு, காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் விமானப் படையினரும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

பொதுபல சேனாவின் கல்முனைக் கூட்டம் சோடிக்கப்பட்ட செய்தி, இதில் உண்மையில்லை

Image
முதல்வர் சிராஸ் மீராசாஹிப் அண்மைக்காலமாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் பொதுபல சேனா இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனை பிரதேசத்தில் பேரணியும் கூட்டமும் நடத்த உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதனால் கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது. இது விடயமாக கல்முனை முதல்வர் ஸிராஸ் மீராசாஹிபை தொடர்பு கொண்டபோது அவர் கூறிய கருத்துக்கள் வருமாறு, பொதுபல சேனா அமைப்பு கல்முனையில் கூட்டமும் பேரணியும் நடாத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்ற நிலையில், கல்முனை மாநகர முதல்வர் என்ற வகையில் எனக்கு உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவித்தலும் இக்கருத்தினை வெளியிடும் வரை கிடைக்கவில்லை என்பதுடன் நானும் இது விடயமாக எவ்வித அனுமதியையும் யாருக்கும் வழங்கவுமில்லை.. முதல்வர் என்ற வகையில் இந்த விடயத்தை மேலும் உறுதி செய்து கொள்வதற்காக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது அவரும் இவ்வாறான எந்த அறிவித்தலும் இது வரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். அவ்வாறான அறிவித்தல்கள் ஏதாவது கிடைக்கப் பெற்றால் த...

கல்முனை வைத்திய சாலை வீதி நிர்மாணிப்பில் மக்கள் அதிருப்தி

Image
 பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம்  வேலை திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன வின் சிபார்சில் நிர்மாணிக்கப்பட்ட  கல்முனை வைத்திய சாலை வீதி நிர்மாணம்  சீராக அமையவில்லை என  அந்த வீதியில் வசிக்கும் மக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இந்த வீதிக்கான் கொடுப்பனவுகள் யாவும் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தால் வளன்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள்  இவ்வீதி கொன்க்ரீட்  இடப்பட்டது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். நிர்மாணிக்கப் பட்ட இவ்வீதியானது இடப்பட்டுள்ள கல் வெளியே தெரிவதாகவும் மழை  காலங்களில் நீர் வழிந்தோடாமல் வெள்ளம் தேங்குவதாகவும் தெரிவித்து  கிழக்கு மாகாண ஆளுநருக்கு  கடிதம் எழுதியுள்ளனர். (கடிதப் பிரதி இணைக்கப் பட்டுள்ளது )

பிரான்ஸ் நாட்டு தூதுவர் கல்முனை வருகை!

Image
இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளிற்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் கிறிஸ்டின் றொபிச்சன் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி.சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின் பேரில் நேற்று மாநகர சபைக்கு வருகை தந்தார். இதன்போது கல்முனை மாநகர சபையின் நடவடிக்கைகள் மற்றும் இங்கு வாழும் சமூகங்களுக்கிடையில் காணப்படும் இன நல்லுறவு போன்ற விடயங்கள் தொடர்பாக முதல்வரினால் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு கல்முனை மாநகரத்திற்கான மாநகர அபிவிருத்தி திட்ட வரைபு முதல்வரினால் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. இச்சந்திப்பில் மாநகர  சபை உறுப்பினர்கள்,  உட்பட  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர சபையில் இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை மாநகர சபையில்  அந்த சபையின் ஊதியத்தில் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 112 ஊழியர்களை இன்று 05 ஆம் திகதி புதன்கிழமை கையொப்பம் இட்டு கடமை செய்ய வேண்டாம் என மாநகர சபை ஆணையாளர்  தடுத்ததையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடு  பட்டனர்  இது சம்மந்தமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஊழியர்களிடம் வினவியபோது; மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி வழமை போன்று கடமைக்கு வருகை தந்த எங்களை ஒப்பமிட வேண்டாம் என உத்திரவிட்டார் என்றனர். ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் வினவியபோது அவர் சிரித்தவராக மேயரிடம் பேசிவிட்டு இது விடயத்தைச் சொல்லுகின்றேன் என்றார். மேயரிடம் அவர் பேசிய பின் தேடிய போது அவர் தனது இடத்தில் காணப்படவில்லை. அவசர அலுவல்கள் நிமிர்த்தம் வெளியில் போய் விட்டார் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக கல்முனை மேயர் கலாநிதி சிராஸ் மீராசாகிபிடம்  வினவியபோது; “ஆளுநர், முதலமைச்சர் ஆகியோருடன் கதைத்த பின்னரே என்னால் இது பற்றி எதுவும் கூற முடியும். ஆணையாளர்தான் நியமன அதிகாரி அவர்தான் மாகாண சபையின் சுற்று நிர...

அரசசேவை விளையாட்டுப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

Image
இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கத்தின் அரசாங்க சேவையில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் உத்தியோகத்தர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக 2013 க்கான பின்வரும் போட்டிகளை நடாத்தப்பட உள்ளன. இந்த போட்டிகள் தொடர்பாக  சகல திணைக்களங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அரசசேவை உத்தியோகத்தர்களிடையே கரம், கிரிக்கெட், செஸ், உதைபந்து, பெட்மின்டன்,, ஹொக்கி, மேசைப்பந்து, கரப்பந்து, எல்லே, வலைப்பந்து, மெய்வல்லுனர் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. மேற்படி போட்டிகள் யாவும் கொழும்பில் ஜுலை மாதம் 26ம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளன. போட்டிகளில் பங்குபற்றும் அரச ஊழியர்கள் தங்களுடைய பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை திணைக்கள தலைவர் ஊடாக செயலாளர், இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கம் 2/12, 216 பொல்ஹெங்கொட வீதி, நாரஹேன்பிட்டிய, கொழும்பு-05 எனும் முகவரிக்கு எதிர்வரும் ஜூன் 26க்கு முன்னர் அனுப்பிவைக்க வேண்டுமென மேற்படி சங்கம் அறிவிக்கின்றது.

இன்று புகைத்தல் எதிர்ப்பு தினம்

Image
Nghijaw;w kdpju;fs; tho;tpd; vOr;rpahy; G+Tyif G+upg;gilar; nra;thu;fs; vd;w fUg; nghUspy; New;W fy;Kid gpuNjr nrayf rKu;j;jp rKf mgptpUj;jp kd;wk; Vw;ghL nra;j ru;tNjr Gifj;jy; vjpu;g;G jpd nfhb tpw;gid tpopg;Gf; fUj;juq;F epfo;tpy; gpujk mjpjpahf fye;J nfhz;l fy;Kid gpu Njr nrayhsu; vk;.vk;.nesgy;>fy;Kid nghyp]; epiya nghWg;gjpfhup V.lgps;A.V.fg;ghu;> rKu;j;jp Kfhikj;Jt gzpg;ghsu; V.Mu;.vk; rhyp`; MfpNahUf;F rKu;j;jp rKf mgptpUj;jp cj;jpNahfj;ju; vd;.vk;.nesrhj; Gifj;jy; vjpu;g;G jpd nfhbtoq;Ftij fhzyhk;;  

சீரற்ற காலநிலை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும்?

Image
தற்போது இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி ஜூன் மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாத முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் இந்த சீரற்ற காலநிலை பெரும் மழையாக இந்து சமுத்திரத்திர நாடுகளான தென்னிந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை காலம் முதலில் கேரளாவில் ஆரம்பித்து படிப்படியாக மற்றப் பகுதிகளுக்குப் பரவும் என்றும் வளிமண்டல ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதனை அமெரிக்காவின் தேசிய காலநிலை சேவைகள் நிலையமும் ஊர்ஜிதம் செய்துள்ளது. இந்தப் பலத்த காற்றுடனான பெருமழை ஜூன் மாதம் 7ஆம் திகதிவரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலநிலை வங்காள விரிகுடாவின் ஊடாக கிழக்கு இந்தியாவையும் பாதிக்கும் என்றும் காலநிலை அவதானிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். ஏற்கனவே இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் சீரற்ற காலநிலை தற்போது நீடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் பத்திரிகை ஒன்றுக்கு எதிராக நஷ்டஈட்டுக் கோரிக்கை!

Image
கிழக்கு மாகாண சபையின் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூர் இலங்கையில் புதிய வாராந்தப் பத்திரிகை ஒன்று பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கி தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்திரிகை ரூபா 500 மில்லியன் நஷ்ட ஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் கடிதமொன்றினை ( டுநவவநச ழக னுநஅயனெ) ஒன்றினை குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.  குறிப்பிட்ட பத்திரிகை ஒன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை மறைமுகமாகக் சுட்டிக் காட்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு இருந்தன. அதில் பிரதியமைச்சர் ஒருவரின் விருந்து உபசாரத்திற்கு சென்ற அமைச்சர் மது போதையில் இருந்ததாகக் தெரிவித்திருந்தது. இதனாலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.