கல்முனை மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து பங்கேற்பு; கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றம்!
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாவின் வீட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைக் கண்டித்து மாநகரசபை உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து கண்டன நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது மாநகரசபையின் உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து சபைக்கு வருகை தந்தனர்.
கடந்த திங்கட்கிழமை கல்முனை மாநகரசபையின் ஆளும் தரப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பான உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லாவின் வீட்டில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதலை கண்டித்தும், அதில் சம்மந்தப்பட்டவரை கைது செய்யக் கோரியும் எதிர்காலத்தில் அங்கத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியுமே உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
அத்துடன், மாநகர பிரதி முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரினால் பிரேரணையும் முன்வைக்கப்பட்டு சபை ஏகமானதாக ஏற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து மாநகர முதல்வர் சிரராஸ் மீராஸாஹிப் உட்பட அங்கத்தவர்கள் அனைவரும் கறுப்புப் பட்டி அணிந்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரிடம் குண்டுத் தாக்குதலுடன் சம்மந்தப்பட்டவர்களை உடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரியும் வேண்டுகோளை முன்வவைத்தனர். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/70685-2013-06-13-09-39-25.html#sthash.AulW8Nhm.dpuf

Comments
Post a Comment