சூறாவளி ஆபத்து இல்லை!
நேற்று சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் மன்னார் முதல் பொத் துவில் வரை கொழும்பு- காலி ஹம்பாந் தோட்டை ஊடாக கடற்கரையோரத்தில் வீசும் பலத்த காற்று பெருமளவு சேதத்தை ஏற்படுத்தினாலும்- தற்போது இலங்கைக்கு சூறாவளி ஆபத்து எதுவும் இல்லையென்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள காலநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இலங்கையின் தெற்மேற்கு கரையோரப் பிரதேசத்தில் ஆழ்கடலிலோ ஆழம் குறைந்த கடல் பிரதேசத்திலோ மீன்பிடி நடவடிக்கைகளை அடுத்த 24 மணி நேரத்தில் ஈடுபடலாகாது என்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு விடுத்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காலநிலை ஆரம்பித்திருப்பதனால் தான் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசுவதாகவும் மேல்- சப்ரகமுவ- மத்திய- ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழையும் காற்றும் அடுத்த ஒரு வார காலத்துக்கு நீடிக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய மழையின்போது ஒரு சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியிருப்பதுடன்- காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றராக இருக்குமென்றும் அறி விக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment