உம்ராவுக்கான விஸா 14 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்படும்!

உம்ரா விசா காலாவதியாகும் காலம் 14 தினங்களுக்கு மட்டுப்படுத்த சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளது.

புனித மக்கா பெரிய பள்ளிவாசலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாலேயே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி நிர்வாகம் இரண்டு தினங்களுக்கு முன் வெளி நாட்டு உம்ரா முகவர்களுக்கு அனுப்பிய சுற்று நிருபத்தின்படி, இந்த புதிய கட்டுப்பாடு இன்றைய தினம் (திங்கட் கிழமை) அமுலுக்கு வருகிறது.

“டெல்லியில் இருக்கும் சவூதி தூதரகம் எமக்கு அனுப்பிய சுற்று நிருபத்தில் ஷஹ்பான் முதலாம் திகதி முதல் உம்ரா விசா 14 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என இந்தியாவின் ஹைத்ராபாத்தில் இருக்கும் உம்ரா முகவர் நிறுவனத்தின் மொஹம்மத் அப்துல் ரஸ்ஸாக் குறிப்பிட்டார்..

உம்ரா செல்லும் யாத்திரிகர்கள் போதுமான காலம் அங்கே தங்கியிருக்க எதிர்பார்த்தே பயண ஏற்பாடுகளை செய்கின்றனர். எனினும் எதிர்வரும் இரு மாத காலத்தில் மக்காவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜித்தாவில் உம்ரா செயற்பாடுகளில் ஈடுபடும் பணியாளரான ரஹ்மான் அஸிஸ், இந்த புதிய கட்டுப்பாடு அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என குறிப்பிட்டார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்